வாழ்ந்து பார்க்கலாம்

Posted by G J Thamilselvi On Wednesday, 29 May 2013 0 comments
மென் இராபொழுதின் மெல்லிய இருளில்
கரம் பற்றி நடக்கலாம்
மென் ஸ்பரிசத்தின் தீண்டலை
ரசித்தபடி பல கதைகள் பேசலாம்


பொய்யாகவேணும் குளிருவதாக
அருகாமை தேடலாம்
பொய்களை உணர்ந்தும் கூட
மெய்யென்று சேரலாம்

காற்றிற்கு தடைவிதித்து
நெருக்கத்தை வரவேற்கலாம்
காமத்தை தீயிலிட்டு
நேசத்தை வளர்க்கலாம்

நட்சத்திரங்கள் பொதித்து
காதல் கூடொன்று கட்டலாம்
மேகத்தை மஞ்சமிட்டு
தூக்கத்தை மிஞ்சலாம்

வா அன்பே
வாழ்ந்து பார்க்கலாம்
யுகங்களை கடந்தாலும்

காதலர்களாய் என்றும்

0 comments:

Post a Comment