அவள் வீட்டு தோட்டத்தில்...

Posted by G J Thamilselvi On Thursday, 9 May 2013 11 comments

மடலாடும் குழுமத்தில்
அவளை சந்தித்தேன்
அவள் என்னை வரவேற்க
அவள் வீட்டு தோட்டத்து
டூலிப்மலர்கள் தருவதாக சொன்னாள்


மடலாடும் போது வந்த
டூலிப் மலர் ஒன்றை
நவீனத்தோடு கொய்துக்கொண்டேன் நான்

கொஞ்சும் சந்தனமும்
தழுவிச்செல்லும் செந்நிறமுமாக
சிரித்தது டூலிப் என்னை பார்த்து

பசுமை பின்ணனியில்
முன்னிலை வகித்து வசீகரித்தது
வஞ்சனை இல்லாமல்

நான் டூலிப்பை பார்த்தேன்
உன்னை தீட்டியது யார்...?
வண்ணமிட்டு உயிர்த்தது யார்...?

மகுடம் தாங்கும் ஆட்சி நங்கை கூட
உன் ஆளுமை போல் இல்லை
என் பணிவுகள் உன் அழகிற்காக

டூலிப் இதழ் சுழித்தது
ஏளனம் அதன் உதடுகளில் இருந்து
மனிதம் செய்யும் மாபெரும் மடமை
உன் பணிவுளில் பெண்ணே என்றது

நான் திகைத்தேன்
டூலிப் வினவியது
என்னை நானா தீட்டினேன்...?
வண்ணங்கள் கொண்டு
நானா ஒப்பனை செய்துக்கொண்டேன்...?

டூலிப் மொழிந்தது
குயவன் கைகளில்
பானை எப்படியோ...!
இயற்கையின் விரல்களில்
மலர்ந்த நானும் அப்படியே...!

வணங்குதல் அவனையே (இயற்கை) என்றும்
பணிந்து எழுக அவன்
திறமைகள் போற்றி...!
வணங்கி பணிந்தது டூலிப்மலர்

11 comments:

 1. அழகு... அருமை... ரசித்தேன்... (படமும்)

  ReplyDelete
 2. குயவன் கைகளில்
  பானை எப்படியோ...!
  இயற்கையின் விரல்களில்
  மலர்ந்த நானும் அப்படியே...! // அழகான வரிகள்

  ReplyDelete
 3. வணங்குதல் அவனையே (இயற்கை) என்றும்
  பணிந்து எழுக அவன்
  திறமைகள் போற்றி...!
  வணங்கி பணிந்தது டூலிப்மலர்

  அழகுமலர் எத்தனை நிறைவாக சிந்திக்கிறது ..! வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா

   Delete

 4. / குயவன் கைகளில்
  பானை எப்படியோ...!
  இயற்கையின் விரல்களில்
  நானும் அப்படியே...! /

  நன்று நன்று.


  ஊடுருவிக் கண்டு கொண்ட உண்மை ஒன்று மலரைப் போலவே புன்னகைக்கிறது. உண்மையைப் போலவே அதுவும் அழகு!

  ReplyDelete
  Replies
  1. உண்மை மணிமேகலா

   Delete
 5. நன்றி, நன்று.

  /குயவன் கைகளில்
  பானை எப்படியோ...!
  இயற்கையின் விரல்களில்
  நானும் அப்படியே...!/

  ஆழத் தோண்டி கண்டடைந்த உண்மையும் புன்னகைக்கிறது. மலர்களைப் போலவே.

  ReplyDelete
 6. கவிதையும் படமும் அருமை .வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனிமரம்

   Delete