நீ காதலிக்கிறாய் என்னை...!

Posted by G J Thamilselvi On Sunday, 5 May 2013 2 comments
நிசப்தம் என்று எண்ணப்படுகிற
அந்த தருணம்
ஓசையின் குறை ஒலி தவிர
வேறொன்றும் இல்லை...

காதல் அல்லவென்று சொல்லும்
உன் இதயம்
காதலின் அளவு கோளை
கட்டுப்படுத்தி பார்க்கும்
பார்வை கோணமே தவிர
பிரிதொன்றும் இல்லை

நீ காதலிக்கிறாய் என்னை
பரிணமித்து உயிர்க்கும்
ஒவ்வொரு உயிரிலும்.

2 comments:

 1. /// பரிணமித்து உயிர்க்கும்
  ஒவ்வொரு உயிரிலும்... ///

  அருமை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete

 2. வணக்கம்

  சின்ன கவியில் பெரிய கருத்தினைப்
  பின்னிய ஆற்றலே பீடு!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete