இதோ என் பயணத்தில்

Posted by G J Thamilselvi On Saturday, 18 May 2013 4 comments

பாலைவன பரப்பில்
விழுந்துயிருட்டும் துளி நீர் போல
இன்னமும் மிச்சமிருக்கிறது
நம்பிக்கை உணர்வு என்னிடத்தில்


அடிகளாய் பாதம் மாற்றியேனும்
கடந்துவிடும் தூரம் தான்
இந்த லட்சிய பயணம்

காய்ந்த உதடுகள் நனைதல்
நிழ்வதற்கேனும் அன்புநீர் கிடைக்க கூடும்
இந்த நெடுந்தூர பயணத்தில்

துவளும் பாதங்கள்
வலுபெற ஒரு திண்ணையேனும் கட்டப்பட்டிருக்கும்
அதற்கான தருணத்தில் இளைபாறவென

திண்ணை ஒட்டிய குடிசையில்
தாய் கடவுள் இருக்க கூடும்
நீர்த்த தண்ணீரை கரைத்தபடி என் வருகைக்காக

இதோ இதோ என் பயணத்தில்
வாழ்தலே வெற்றியின் சுவடுதான்
கல்வெட்டுகளாய் விட்டுபோகிறேன்
என் அனுபவங்களை
பின் சந்ததிகளின் அறி்தலுக்கென.

4 comments:

 1. மிக மிக அருமை
  அவ நம்பிக்கை பாலைக்குள்ளும்
  நிச்சயம் நமபிக்கை சோலையிருக்கும் என
  நம்பிக்கையூட்டிப்போகும் கவிதை அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. கல்வெட்டுகளாய் விட்டுபோகிறேன்
  என் அனுபவங்களை
  பின் சந்ததிகளின் அறி்தலுக்கென.//
  நிச்சயம் நல்ல செய்திதான்

  ReplyDelete
 3. //அடிகளாய் பாதம் மாற்றியேனும்
  கடந்துவிடும் தூரம் தான்
  இந்த லட்சிய பயணம் //

  நம்பிக்கையோடு ஒரு கவிதை!

  ReplyDelete
 4. /// வாழ்தலே வெற்றியின் சுவடுதான் ///

  அருமை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete