காத்திருப்பு

Posted by G J Thamilselvi On Monday, 27 May 2013 3 comments

பசுமையின் நிழல் ஒன்றில்

ஒண்டியபடி நான்

உனக்காக காத்திருந்த தருணங்கள்

விழிகள் சில கணம்

பாதையை நோக்கியபடி

சில கணம் விரல்களை கோர்த்தும்

பின் சேர்த்தும் பிரித்தபடி

நிழலில் வெம்மையை தரிசித்த

முழு சூரிய நாட்கள் அவை

உடல் தகிக்காத போதும்

வெம்மை நினைவுளை பொசுக்கியது

பனியின் குளுமையோ

நிலவின் தண்மையோ

உன் அருகாமை பொழுதுகளில்

கனிந்துவிடும் என்று ஏங்கிய

நாட்களின் நிழற் வடிவம்

கடும் வார்த்தைகளுக்குள்

காதலை எங்கு ஒளித்துவைத்தாயோ

ஒவ்வொரு முறை நெருங்கும் போதும்

காதல் உடலின் சதை துண்டை

முனை மழுங்கிய கத்தியால் கீறி

காதலை பதம் பார்த்தது அது

வேர்விட துளிர்விட்ட

காதல் செடியில்

கொட்டப்பட்ட வெந்நீராக

பட்டுபோன உன் பிம்பம்

இன்றும் என் காத்திருப்பு

பசுமையான நிழலில் ஒண்டியபடி

சலனம் ஏதுமற்ற

நீரோடையில் எறியபடா கல்லாக

காதல் தனித்தே நிற்கிறது.

3 comments:

 1. முடிவில் தனித்தே நின்று வென்று விட்டது...!

  ReplyDelete
 2. புரிந்து கொள்ளப்படாத காதல்
  குறித்த பதிவு மனம் கீறிச் சென்றது
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. வணக்கம்

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete