அழுகை

Posted by G J Thamilselvi On Saturday, 25 May 2013 4 comments
மென்புன்னகை ஒன்று நிகழ்கிறது
குமிழ்ந்து வரும் துயரத்தை
எரித்து பொசுக்கவென

மகிழ்வதாக காண்பிக்க
சிரிக்க முயன்று
இரு உதடுகள் அஷ்டகோணலாய்
வடிவொத்து போகிறது


கண்ணீரின் உற்பத்தியை
சற்றே நிறுத்திவைக்க
வழி பார்க்கிறது சுயம்

அழுவது பாவச்செயல்
அதுவும் பிறர் முன் அழுவது
தண்டிக்கப்படவேண்டிய பெருங்குற்றம்

சுயபட்சாதாபததில்
சுருண்டு விழுகிறது
கண்ணீர் துளிகள் எத்தனை முயன்றும்
தடுக்க இயலாமல்

சுவர் துணை நிற்க
உற்ற நண்பனாய் அனைத்து
துணை புரிகிறது என் கண்ணீர் மறைக்க

மனம் தெளிவடைகிறது
அழுகைக்கு பின் வரும்
ஒரு புத்துணர்வில் - மீண்டும்
தயாராகிறேன் அடுத்த
அஸ்திரத்தை தாங்கவென

4 comments:

 1. அருமை அருமை
  தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும்
  எளிய ஜீவன்கள் குறித்த சோகத்தையும்
  பக்குவத்தையும் சொல்லிப்போன விதம்
  மனம் சுட்டது
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. அழுகைக்கு பின் வரும் ஒரு புத்துணர்வு - உண்மை...

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. மனதை உருக்கும் கவிதை.. எண்ணவோட்டங்களை யாதார்த்தமான வார்த்தைகளில் கவிதையாய் கொடுத்தப் பாங்கு என்னை கவர்ந்தது..


  "அழுவது ஒரு பாவச் செயல்" அட..இது புதுமையாக உள்ளதே..!!

  ReplyDelete
 4. மென் உணர்வுகள் சொல்லும் கவிதை

  ReplyDelete