என்னை விட்டு அகன்று போ...!

Posted by G J Thamilselvi On Wednesday, 8 May 2013 2 comments
குடும்பமே...!
என்னை விட்டு அகன்று போ
உன் பொய் முகங்களை
என்னைவிட்டு அகற்றி போடு

உன் பயம்
உன் தோய்வு
உன் சந்தேகம்
உன் சஞ்சலம்
எதுவும் எனக்கு வெண்டாம்


உன் மாயக்கருத்துக்களும்
அது திரிந்து போகும்
நிஜமற்ற முகங்களும்
தீயிலிட்டு பொசுக்கு

என்னை குறுக்கி போடும்
எந்த கிறுக்கல் எண்ணங்களும்
என்னிடத்தில் சரண்புக வேண்டாம்

மனம் விரிந்து அகண்டமாகியது
அதன் எண்ணங்கள் புடமிடப்பட்டு
தேர்ந்து குவிந்து கலைந்து போகிறது

வெற்றிடத்தில் பயணித்து
தன் சுவடுகள் இன்றி
பிறந்து மரணிக்க எங்கே கற்றதோ...

என் பயணத்தில் உன் பாசவலை
என்னை கிழித்து போடவேண்டாம்
நீ நீயாக இரு
நான் நானாக இருக்கிறேன்

பற்றுதல் அற்ற அன்பில்
உன் பயணத்திற்கு நானோ
அல்லவோ என்றால்
என் பயணத்திற்கு நீயோ
உற்ற துணையாக மட்டும்
கடந்து போவோம்
தாமரை இலை தண்ணீர் போல

2 comments:

 1. இன்றைய நிலை அப்படித்தான் இருக்கிறது...


  பட்டும் படாமலே...
  தொட்டும் தொடாமலே...
  தாமரை இலை தண்ணீர் போல் நீ...
  ஒட்டி ஒட்டாமலிரு...

  சந்தோஷி சந்தோஷி சந்தோஷி...
  உன் சந்தோஷம் உன் கையில் நீ யோசி...

  மாயா... மாயா... மாயா... மாயா...
  எல்லாம்... சாயா... சாயா... சாயா... சாயா...

  ReplyDelete
 2. என்னை குறுக்கி போடும்

  எந்த கிறுக்கல் எண்ணங்களும்

  என்னிடத்தில் சரண்புக வேண்டாம்

  sirappaana varigal. paaraattugal.

  ReplyDelete