நான் காத்திருக்கிறேன்

Posted by G J Thamilselvi On Wednesday, 29 May 2013 5 comments
நான் காத்திருக்கிறேன்
கொட்டாத மழைக்காக
நீ குடை கொண்டு
வரவேண்டும் என்று


நான் காத்திருக்கிறேன்
குடையின் நிமித்தம்
உன் அன்பு எனக்காக
பகிரபட வேண்டும் என்று

நான் காத்திருக்கிறேன்
மென் இருளில்
உன் தேடு பொருளாக
நான் ஆக வேண்டும் என்று

நான் காத்திருக்கிறேன்
என் நெற்றியில்
உன் உதடுகளின் ஈர முத்தம்
காதல் முத்திரை ஆக்கப்படும் என்று

நான் காத்திருக்கிறேன்
உன் விரல்களால்
என் கருங்கூந்தல்
உன்மத்தின் உயர்ந்த
வருடலாகும் என்று

நான் காத்திருக்கிறேன்
என் மென் உணர்வுகள்
அறிந்தவனாக – நீ
என்னை உயிரில் தாங்கவேண்டும்

5 comments:

 1. இனிய காத்திருப்புக்கள்...

  ReplyDelete
 2. அழகான அன்பான காத்திருப்பு.
  தொடருங்கள் தோழி.

  ReplyDelete
 3. அருமை அருமை
  பல சமயங்களில் ஒன்றை அடைதலைவிட
  அடைதலுக்காகக் காத்திருக்கும் கணங்கள்
  அற்புதமானவைகள்
  சொல்லிப்போனவிதம் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. அழகிய காத்திருப்புகள் அக்கா.

  ReplyDelete
 5. முதன் முறை தங்களின் வலைப் பூ விற்கு வருகை தருகின்றேன். இனி தொடர்வேன்.
  சுகமே காத்திருத்தல்தானே

  ReplyDelete