நான்...? நீ...!

Posted by G J Thamilselvi On Thursday, 2 May 2013 7 comments

உன் அருகாமையில்
எனக்குள் தோன்றும் தயக்கங்களுக்கு
குழப்பம் என்று பெயர் சூட்டினாய் நீ
காதல் என்று எழுதிபார்க்கிறேன் நான்

வார்த்தைகளை கோர்வையாக்கி
உரையாடல் துவங்கும்போதே
குப்பை என்று தூக்கி எறிகிறாய்
குப்பைக்குள் உயிர்க்கும்
என் காதல் கருவை
சங்கடத்தோடு அடைகாக்கிறேன் நான்


திசைக்கொருவராய் நின்று
பார்வைகளை மாற்றி பார்க்கிறோம்
உன் கண்களில் நான் அற்பமாக
என் மனவெளியிலோ
நீ கோபுர கலசமாக7 comments:

 1. என் மனவெளியிலோ
  நீ கோபுர கலசமாக//நன்று

  ReplyDelete
 2. பார்வைகளின் பரிமாணங்களையும்
  முன்னிலையோரை
  தன்னிலையில் வைத்து பார்த்து
  உற்றுநோக்கும் குணங்களையும்
  மிகவும் அழகாக சொல்லியிருகீங்க....

  ReplyDelete
 3. ரசித்தேன்...

  பார்வைகள் விரைவில் மாறும்... மாறட்டும்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மாற்றங்கள் மட்டுமே மாறாமல் என்றும் நிலைத்திருக்கும் அய்யா

   Delete
 4. தயக்கங்களும் தவிப்புகளுமே காதல் தானே சகோ ,மனதை தொட்ட கவிதயை தந்தமைக்கு வாழ்த்துகள்

  ReplyDelete