மின்சாரமில்லா இரவுகள்

Posted by G J Thamilselvi On Sunday, 19 May 2013 6 comments

இரவின் வெற்றிடச் சாலையில்
ஒருவருமில்லை
காற்றும் தன் இறக்கைகளை சுருக்கி
துயிலுற சென்றது போலும்
வியர்வையில் அலங்கரித்து
அழகியல் படிக்கிறது உடல்


நிசப்த இரவில்
சில்வண்டு இசைமீட்டி எரிச்சலூட்டுகிறது
கொசு கொஞ்சி ரீங்கரித்து
முத்தமிட்டு வலியூட்டுகிறது
மின்சாரமின்மையின் நெருடல்கள்
இரவில் தான் நாட்டியம் புரிகிறது

டடக் டடக் டடக் என
சூழலும் மின்விசிறியும்
உயிர்பொருள் இன்றி
தீடீரென இறந்துபோவதும்
துக்கத்தை தொண்டைக்குள் நிறுத்தி
அழமுடியாமல் மனம்
காற்றிற்கு அரற்றுவதும்
வாடிக்கையானது நித்தமும்

உறக்கம் உறங்க மறுத்து
உழன்று சுழல்கிறது ஆழகடல் சுழலைபோல
இமைகள் தழுவுவதும்
இமைகள் இணைய மறந்து
ஊடல் கொண்டு தவிப்பதுமாக
கழிகிறது மின்சாரமில்லாத இரவுகள்

6 comments:

 1. தினமும் இதே கொடுமை தான்...

  ReplyDelete
 2. மின்சாரம் தரும் வேதனையை மிதமான தமிழில் மிக அற்புதமாய் சொல்லப்பட்டிருக்கிற கவிதை...

  ReplyDelete
 3. "மின்சாரமில்லா இரவுகள்"

  படத்தேர்வு வெகு அருமை. ;)

  சொல்லப்பட்டுள்ள வர்ணனைகள் உண்மை/அருமை..

  தினமும் பட்டுவரும் கொடுகை தான்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 4. காலத்தை ஒட்டியக் கவிதை. படிக்கப் படிக்க ரசனை கூட்டும் வரிகள். வெம்மையின் அழுத்தத்தை எழுத்தினால் உயிர்ப்பிக்குமொரு கதறலின் சப்தத்தை கவிதை படிக்கையில் கேட்டுக் கொள்கிறது மனசு..

  நிறைய பிடித்திருந்தது. நன்றி.

  வித்யாசாகர்

  ReplyDelete
 5. காலத்தை ஒட்டியக் கவிதை. படிக்கப் படிக்க ரசனை கூட்டும் வரிகள். வெம்மையின் அழுத்தத்தை எழுத்தினால் உயிர்ப்பிக்குமொரு கதறலின் சப்தத்தை கவிதை படிக்கையில் கேட்டுக் கொள்கிறது மனசு..

  நிறைய பிடித்திருந்தது. நன்றி.

  வித்யாசாகர்

  ReplyDelete