வாழ்தல் பயணம்

Posted by G J Thamilselvi On Saturday, 18 May 2013 0 comments

நிரந்த புள்ளி ஒன்றை நிர்மாணித்து
லட்சியத்தின் நுகர்வில்
பயணிக்கிறது என் வாழ்தல் பயணங்கள்


இந்த நிமிடமோ மறுநிமிடமோ
என் கை தவழக்கூடும் அந்த புள்ளி
நாளையோ நாளை மறுதினமோ
நிச்சயப்படும் அந்த நிகழ்புள்ளி

துறந்த தருணங்கள் சிறு துளி கண்ணீரை
நினைவு அடையாளங்களாக
சிதறிச்செல்கிறது விழாகால சந்தனமாக

நிமிர்ந்து பார்க்க நாழிகை இன்றி
என் வாழ்தல் ரசனை இன்று
துறவு கொள்கிறது
ஆசைகளை காவியில் போர்த்தியபடி

அந்த ஒரு புள்ளியில்
என் இழப்புகள் புன்னகையை புதைத்து
பரிகசித்து கொக்கரிக்குமோ என்னவோ...?

0 comments:

Post a Comment