காதல் பொழுதுகள்

Posted by G J Thamilselvi On Friday, 17 May 2013 2 comments

கொக்கு பறக்குது
மேகம் வழி சேதி சொல்ல
கூட்டமா கொஞ்சம் கூடி வருது
காதல் சேரும் தேதி சொல்ல


வெள்ளை மேக பஞ்சணையில்
தவமிருக்கும் நெஞ்சணையில்
நிலவு அவள் துணையிருக்க
உன் நினைவுதனில் தவமிருந்தேன்


நானோ ஓரிடத்தில்
நீயோ வேறிடத்தில்
மனங்கள் பிணைந்திடுது
தன் இடத்தில்

கண்கள் சந்தித்ததில்
காதல் சிந்தித்ததில்
நெஞ்சம் இணைந்தது
விழி பிம்பத்தினில்

காற்று விசை வழி
காதலை சொன்னேன்
அது இதயத்தை மீட்டியதா...?

கால்கள் கடுக்க நித்தம்
காத்திருந்தே தவித்தேன்
என் நேசத்தை உணர்த்தியதா...?

மலர்கள் பறித்த போது
உன் மலர்முகம் நான் அறிந்தேன்
இலைகள் தீண்டியதில்
உன் விரல்களின் லீலை புரிந்தேன்

காகம் கரைந்த போது
உன் வருகைக்கு முத்திரை வைத்தேன்
நெருப்பு கூவி அழைக்க
நீ வருவதில் சித்தம் பதித்தேன்

காத்திருந்த நாழிகை எல்லாம்
சுகமாக கழிந்ததடா  உன்
முன் நின்ற பொழுதுகள் மொத்தம்
வெட்கத்திலே நனைந்ததடா

விழி திறந்ததும்
கனவு கலையுமோவென்று
யுகத்திரையினை கிழித்து
காலச் சுவட்டினை அழித்து
இதயத்தில் உன்னை நிறுத்தி வைத்தேன்

2 comments:

 1. ரசித்தேன்...

  தமிழ்மணம் +1 இணைத்தாகி விட்டது... நன்றி...

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. கவித்தேன் படித்தேன் ரசித்தேன்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete