நீ இன்றி நானும் இல்லை

Posted by G J Thamilselvi On Thursday, 23 May 2013 3 comments

சின்ன சின்னதாய்
சில ஆசைகள் இதயத்தில் தேக்கியே
நான் உனை தேடினேன்

ஜென்ம ஜென்மமாய்
உனை சேர்ந்திட உலகத்தில்
வழியின்றி வாடினேன்


சில நேரம் மலர்களில் சிரித்தாய்
பல நேரம் காற்றினில் மறைந்தாய்
அணுவாக எங்குமிருந்து
எனை ருசித்தாய்

பலமாக கஷ்டங்கள் கொடுத்தாய்
முன்நின்று துஷ்டனாய் நடித்தாய்
துவண்டு நான் நின்ற பொழுதில்
ஏந்திக்கொண்டாய்

அதிகாரத்தில் ஆணென்று நிமிர்ந்தாய்
அடக்கியே ஆண்டிட துடித்தாய்
அப்படி தான் எண்ணியிருந்தேன்
ஏமாற்றம் கொடுத்தாய்

பலநேரங்கள் அன்னையாய் அணைத்தாய்
சில நேரங்கள் தந்தையாய் துடித்தாய்
கரிசனைகள் கொண்டு என்னை
வார்த்தெடுத்தாய்

ஆணின்றி பெண் வாழ்தல்
உயிரின் வறுமைதான்
பெண் இன்றி ஆண் வாழ்தல்
பிரபஞ்ச வெறுமைதான்

நீ இன்றி நானும் இல்லை
நானின்றி நீயும் இல்லை
நாம் இன்றி இவ்வுலகில்
உயிர்பொருள் தோன்றுவதில்லை

3 comments:

 1. அருமையாக முடித்தும் உள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. ஆழமான அன்பை
  எளிமையான வார்த்தைகளைக் கொண்டே
  அழுத்தமாகச் சொல்லிப்போனது மனம் கவர்ந்தது

  ReplyDelete
 3. எளிமையான வார்த்தைகள். இதயம் துளைத்து முளைத்துவரும் காதலையும், பிரபஞ்ச உயிர்த்தோன்றலின் அடிப்படையையும் சொல்லி முடித்தவிதம் அருமை.. ! பாராட்டுகள்.

  ReplyDelete