மீண்டும் ஒரு முறை

Posted by G J Thamilselvi On Tuesday, 14 May 2013 7 comments

காத்திருப்பில் கரைந்து போன
அந்த அணு துளி நிமிடங்களை
மீண்டும் ஒரு முறை
சிநேகித்து அழைக்கிறேன்


செல்ல சிணுங்கல்களையும்
கோபம் கொண்டு அழுத நாளையும்
வருகிறேன் என்று சொல்லி
வாராதே போன நாளையும்
சொல்லி அங்கலாய்க்கிறது அவை

கொன்றை மரத்தின்
செவ்வண்ண மலர்களையும்
வேப்ப இலைகளில்
பசுங்கொழுந்துகளையும்
காற்றில் அசைந்து நடனம்
புரிந்த அந்த புங்கன் மர காரிகையையும்
நினைவுகளில் விட்டுசெல்விறது அவை

நீ இறுக பற்றியதில்
என் உள்ளங்கை வியர்வை முத்துக்களை
பரிசளித்த அன்றைய தினம்
எதிர்பாரா தருணம் ஒன்றில்
என் குழல் ஒதுக்கி நீ ரசித்த கணம்
உதடுகள் கோபம் கொள்ள
கண்களில் நீ காதல் சொன்ன
அந்த மழை நாள் இரவு

இல்லாத இந்த வாழ்க்கை
அத்தனையும் பொய் என்று
உரக்க கூவி கோபக்கனலால்
எரிக்கிறது என்னை
மீண்டும் ஒரு முறை
எனக்காகவே பிறந்து
என்னோடு வழி நடக்க
ஏங்கித் தவிக்கிறது என் மனது.

7 comments:

 1. ரசிக்க வைக்கும் ஏங்க வைக்கும் வரிகள்...

  ReplyDelete
 2. தமிழ்மணம் (+1) இணைத்தாகி விட்டது... நன்றி...

  ReplyDelete
 3. ஓவியமும் அதற்கான காவியமாய் அமைந்த
  கவிதையும் மிக மிக அருமை
  ரசித்து மகிழ்ந்தோம்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. புரியாத மரங்கள்...
  புரியாத மலர்கள்...
  புரியாத கவிதை...

  புரிவதற்குத் தவிக்கிறது மனது... :)

  அழகு

  ReplyDelete
 5. அக்கா மனம் கனத்துப் போனது.

  ReplyDelete
 6. இந்தப் பிரிவு தான் எத்தனை கொடியது...
  வாட்டி வதைக்கும் வாணலி ...
  பிரிவும் பிரிவின் நிமித்தமும் இயல்பாக உங்கள் கவி வரிகளில்...
  ==
  கவிதையும் வரை ஓவியமும் ஒன்றுக்கொன்று போட்டிபோடுகின்றன...

  ReplyDelete
 7. அருமையான கவிதை.. இறுதியில் கொஞ்சம் வலியோடு....

  ReplyDelete