உன்னில் நான்

Posted by G J Thamilselvi On Saturday, 11 May 2013 6 comments

உணர்வற்ற தளத்தில்
வெற்றிடம் நிரப்பப்படுகிறது
நான் காணாத அந்த மனவெளியில்
உன்னுடன் வாழ்தல் பொருட்டு


என் ஒட்டுமொத்த காதல்
உன் முன் அர்ச்சிக்கப்பட்டு
ஆராதனை மலர்களாக மரணித்துபோகிறது

உன் வருகைக்காக காத்திருக்கும்
நிமிட கணங்களில் மட்டு்ம்
எதிர்பார்ப்பின் உயிர் அலை

இன்றோ நாளையோ
நீ வந்துவிடக் கூடும்
வரைகள் அற்ற காதல்
உன்னில் பகிரப்படும் போது

உயிரின் உன்னத பேராற்றலாக
என்னில் கரைந்து பின்
உன்னில் உயிர்க்கும் வித்தை
அந்நாளில் பயிலப்படும் நம்மால்

கற்றல் பொருட்டு
இரு பெருவெளிகளாக
விரிந்து பெருகும் இந்த பிரபஞ்ச மனம்
அன்று உன்னில் குவியக்கூடும்


6 comments:


 1. வணக்கம்!

  உன்னில்நான் என்ற உயா்தமிழ்ப் தேன்கவி
  என்னில் கலக்கும் இனித்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 2. அருமையாக முடித்துள்ளீர்கள்...

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. இணைதலின் நிமித்தம் போற்றும்
  அழகிய உணர்வுக் கவிதை...
  ==
  என் வலைத்தளத்துக்கு உங்களை வரவேற்கிறேன்..

  http://www.ilavenirkaalam.blogspot.com/

  ReplyDelete
 4. என் ஒட்டுமொத்த காதல்
  உன் முன் அர்ச்சிக்கப்பட்டு
  ஆராதனை மலர்களாக மரணித்துபோகிறது//
  இதுதான் வாழ்க்கை

  ReplyDelete
 5. இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..

  ReplyDelete
 6. இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..
  Vetha.Elangathilakam.

  ReplyDelete