உழைப்பாளர் தினம்

Posted by G J Thamilselvi On Wednesday, 1 May 2013 5 comments

உழைப்பாளர் தினம் என்று
ஒரு நாளை ஒதுக்கி வைத்து
திருநாளாய் மாலை சூடி
வாழ்த்துக்கள் பரிந்துரைத்தால்
உழைப்பவர் மாண்பு செழித்திடுமா...?


சுமை தூக்கி வாழ்பவனும்
சேற்றிலே உழல்பவனும்
சாக்கடை துப்புரவாக்கி
துப்பற்று சாபவனும்
பசித்து களைத்திருக்க
திருநாட்கள் மகிழ்ந்திடுமா...?

ஒரு பக்கம் களியாட்டம்
மறு பக்கம் களிக்கே ஆட்டம்
ஒரு பக்கம் நவ நாகரீகம்
மறு பக்கம் நாவல் பழத்திற்கு
ஏங்கும் மழலை பிஞ்சுகள் போல
பசி தீர்க்க பரிதவிக்கும்
ஏழ்மையின் மாந்தர்கள்.

பரிதவித்த இதயத்தோடு
புறகணித்தேன் திருநாட்கள் அத்தனையும்
அனைவரும் சமம் என்று
ஒரு நாள் வரும்போது
பட்டினி அற்ற மழலை முகங்கள்
மலராக மலரும்போது
தினம் தோன்றும் நாட்கள் அது
திருவிழா கோலம் கொள்ளும்.

5 comments:


 1. சுமை தூக்கி வாழ்பவனும்
  சேற்றிலே உழல்பவனும்
  சாக்கடை துப்புரவாக்கி
  துப்பற்று சாபவனும்
  பசித்து களைத்திருக்க
  திருநாட்கள் மகிழ்ந்திடுமா...?//

  ஆஹா இதைத்தான் சொல்ல நினைத்துப் பதிவிட்டேன்.நீங்களும் வந்து கருத்துச் சொன்னீர்கள்.
  இங்கு வந்து பார்த்தால் கவிதை வலியோடும்வலிமையாகவும் இருக்கிறது.மனம்நிறைந்த நன்றி அம்மா.

  ReplyDelete
 2. சிந்திக்க வேண்டிய வரிகள்...

  என்றும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்...

  நேரம் கிடைப்பின் வாசிக்க அன்புடன் அழைக்கிறேன்... நன்றி...

  Visit : http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Pain-Gain.html

  ReplyDelete
 3. யோசிக்க வேண்டிய கேள்வி ?

  ReplyDelete
 4. சிறந்த சிந்தனை வரிகள்....
  ஓங்கட்டும் உழைப்பாளர் கரங்கள்....

  ReplyDelete