நான் காத்திருக்கிறேன்

Posted by G J Thamilselvi On Wednesday, 29 May 2013 5 comments
நான் காத்திருக்கிறேன்
கொட்டாத மழைக்காக
நீ குடை கொண்டு
வரவேண்டும் என்று
மேலும் வாசிக்க

வாழ்ந்து பார்க்கலாம்

Posted by G J Thamilselvi On 0 comments
மென் இராபொழுதின் மெல்லிய இருளில்
கரம் பற்றி நடக்கலாம்
மென் ஸ்பரிசத்தின் தீண்டலை
ரசித்தபடி பல கதைகள் பேசலாம்
மேலும் வாசிக்க

காதல் நீயடா

Posted by G J Thamilselvi On 0 comments
என் சிந்தனை கூட்டிற்குள்
சிறகடித்து செல்லும்
பட்டாம்பூச்சி நீயடா
காலை வெண்பனி போலவே
தொடாமல் குளீருட்டும்
காதல் நீர் குமிழ் நீயடா
மேலும் வாசிக்க

காத்திருப்பு

Posted by G J Thamilselvi On Monday, 27 May 2013 3 comments

பசுமையின் நிழல் ஒன்றில்

ஒண்டியபடி நான்

உனக்காக காத்திருந்த தருணங்கள்

விழிகள் சில கணம்

பாதையை நோக்கியபடி

சில கணம் விரல்களை கோர்த்தும்

பின் சேர்த்தும் பிரித்தபடி
மேலும் வாசிக்க

அழுகை

Posted by G J Thamilselvi On Saturday, 25 May 2013 4 comments
மென்புன்னகை ஒன்று நிகழ்கிறது
குமிழ்ந்து வரும் துயரத்தை
எரித்து பொசுக்கவென

மகிழ்வதாக காண்பிக்க
சிரிக்க முயன்று
இரு உதடுகள் அஷ்டகோணலாய்
வடிவொத்து போகிறது
மேலும் வாசிக்க

தினம் என் பயணம் - 9

Posted by G J Thamilselvi On Friday, 24 May 2013 3 comments

இன்றைய தின என் அலுவலக பயணம் ஒரு சிறப்பனுவத்தை என்னுள் துவக்கியது. ஆரஞ்சு வண்ணத்தில் சுடிதார். தூக்கி போடப்பட்ட நதியா கொண்டை, அதன் பக்கவாட்டில் ஒரு ஆரஞ்சு நிற ஒன்றை ரோஜா. நெற்றியில் சின்னதாய் குங்கும நிற ஸ்டிக்கர். கண்ணாடியில் என்னை பார்த்து, தமிழ் இன்று அழகாய் இருக்கிறாயே என்றேன். நிழல் தமிழ்ச்செல்வியின் முறுவலிப்பில் முழுதிருப்தி எனக்கு.  கொஞ்சம் விசிலடிக்க தோன்றியது. எப்போதாவது உற்சாக மனோநிலையில் மனதில் தோன்றும் ராகத்தை விசிலடிப்பது உண்டு. என் விசில் சப்தம் கேட்கும் போதெல்லாம் பாட்டி சொல்வாள், பெண்கள் விசிலடிப்பதும், சேவல் முட்டையிடுவதும் கர்த்தருக்கு அருவருப்பான காரியம் என்று.
மேலும் வாசிக்க

நீ இன்றி நானும் இல்லை

Posted by G J Thamilselvi On Thursday, 23 May 2013 3 comments

சின்ன சின்னதாய்
சில ஆசைகள் இதயத்தில் தேக்கியே
நான் உனை தேடினேன்

ஜென்ம ஜென்மமாய்
உனை சேர்ந்திட உலகத்தில்
வழியின்றி வாடினேன்
மேலும் வாசிக்க

சாதிகள் இல்லையடி பாப்பா

Posted by G J Thamilselvi On 2 comments
குழந்தைகளுக்கு கற்றுத்தரப்படுகிற நல்லொழுக்கங்கள் ஏட்டுக்கல்வியாய் நின்று போகிறதே. சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடம் கற்று கொடுத்துவிட்டு நீ எந்த சாதி என்று கேட்கும் நேரங்களில், இந்த முரண்பாட்டை குழந்தைகள் எந்த வகையில் புரிந்துக்கொள்ளும்.


சாதிகள் இல்லையடி பாப்பா..!
குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்...!?
மேலும் வாசிக்க

தினம் என் பயணம் - 8 (மேல்செங்கத்தில் மான் வேட்டை)

Posted by G J Thamilselvi On Tuesday, 21 May 2013 2 comments

மனம் வின்னென்று ஒரு வலியை பரப்பி சென்றது நேற்று இரவு சன் தொலைக்காட்சியின் ஏழுமணி செய்தியை கேட்டபோது. மேல்செங்கம் வனப்பகுதியில் 5 மான்களை சுட்டுகொன்ற சம்பவத்தை பற்றி அந்த செய்தி பின்வருமாறு அறிவித்தது. 
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்திற்கு உட்பட்டதான மேல்செங்கம் வனப்பகுதியில் மான் வேட்டையாடிய முன்னாள் துணை கமிஷனர் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். 
மேலும் வாசிக்க

மின்சாரமில்லா இரவுகள்

Posted by G J Thamilselvi On Sunday, 19 May 2013 6 comments

இரவின் வெற்றிடச் சாலையில்
ஒருவருமில்லை
காற்றும் தன் இறக்கைகளை சுருக்கி
துயிலுற சென்றது போலும்
வியர்வையில் அலங்கரித்து
அழகியல் படிக்கிறது உடல்
மேலும் வாசிக்க

இதோ என் பயணத்தில்

Posted by G J Thamilselvi On Saturday, 18 May 2013 4 comments

பாலைவன பரப்பில்
விழுந்துயிருட்டும் துளி நீர் போல
இன்னமும் மிச்சமிருக்கிறது
நம்பிக்கை உணர்வு என்னிடத்தில்
மேலும் வாசிக்க

வாழ்தல் பயணம்

Posted by G J Thamilselvi On 0 comments

நிரந்த புள்ளி ஒன்றை நிர்மாணித்து
லட்சியத்தின் நுகர்வில்
பயணிக்கிறது என் வாழ்தல் பயணங்கள்
மேலும் வாசிக்க

காதல் பொழுதுகள்

Posted by G J Thamilselvi On Friday, 17 May 2013 2 comments

கொக்கு பறக்குது
மேகம் வழி சேதி சொல்ல
கூட்டமா கொஞ்சம் கூடி வருது
காதல் சேரும் தேதி சொல்ல
மேலும் வாசிக்க

பாராமல் செல்வதேனடா...?

Posted by G J Thamilselvi On Thursday, 16 May 2013 4 comments

ஏனோ சிந்தனையில் மாற்றம்
செம்பழ தீயாய் கொல்கின்றது
பார்வை உன்னை தொட்டு தொட்டு
எனை விட்டுவிட சொல்கின்றது

நீயோ எனை காணாமல்
முன் பார்க்க வேண்டும்
நானோ உன் முகம் நோக்க
விழிப் பதிவாக வேண்டும்
மேலும் வாசிக்க

மீண்டும் ஒரு முறை

Posted by G J Thamilselvi On Tuesday, 14 May 2013 7 comments

காத்திருப்பில் கரைந்து போன
அந்த அணு துளி நிமிடங்களை
மீண்டும் ஒரு முறை
சிநேகித்து அழைக்கிறேன்
மேலும் வாசிக்க

என் கனவுகள்

Posted by G J Thamilselvi On Sunday, 12 May 2013 1 comments

கனவு வருவது உண்டு
இரவின் இறுக்கத்தில்
காற்று கோபித்து
தழுவ மறுத்த தருணங்களில்
கனவு அர்த்தங்களை
விட்டு செல்லாமல்
கலைந்து போவதும் உண்டு
மேலும் வாசிக்க

தினம் என் பயணம் - 7

Posted by G J Thamilselvi On 3 comments

வெகுநாட்களுக்கு பிறகு இந்த தொடர்மூலமாக தங்கள் அனைவரையும் சந்திக்க விரும்புகிறேன். சமீபகாலமாக எழுத்து என்வசம் இல்லை. மனம் ஒரு குழப்ப நிலையில் சங்கமித்துவிட, என் தொடர்பயணம் எப்படிபட்டதாக இருக்கும் என்பது குறித்தான கேள்விகள் என்னை குடையத்தொடங்கிவிட்டது.
மேலும் வாசிக்க

உன்னில் நான்

Posted by G J Thamilselvi On Saturday, 11 May 2013 6 comments

உணர்வற்ற தளத்தில்
வெற்றிடம் நிரப்பப்படுகிறது
நான் காணாத அந்த மனவெளியில்
உன்னுடன் வாழ்தல் பொருட்டு
மேலும் வாசிக்க

அவள் வீட்டு தோட்டத்தில்...

Posted by G J Thamilselvi On Thursday, 9 May 2013 11 comments

மடலாடும் குழுமத்தில்
அவளை சந்தித்தேன்
அவள் என்னை வரவேற்க
அவள் வீட்டு தோட்டத்து
டூலிப்மலர்கள் தருவதாக சொன்னாள்
மேலும் வாசிக்க

என்னை விட்டு அகன்று போ...!

Posted by G J Thamilselvi On Wednesday, 8 May 2013 2 comments
குடும்பமே...!
என்னை விட்டு அகன்று போ
உன் பொய் முகங்களை
என்னைவிட்டு அகற்றி போடு

உன் பயம்
உன் தோய்வு
உன் சந்தேகம்
உன் சஞ்சலம்
எதுவும் எனக்கு வெண்டாம்
மேலும் வாசிக்க

நீதி தேவதையே...! என் தாயுமானவளே...!

Posted by G J Thamilselvi On Monday, 6 May 2013 3 comments

எந்தையுமானவளே...!
தமிழ்த்திரு தாயவளே...!
பண்போடு அன்பு புகட்டி
வீரம் தரித்து வளர்த்தவளே...!
மேலும் வாசிக்க

துணிந்து நில்

Posted by G J Thamilselvi On Sunday, 5 May 2013 2 comments

மூச்சை இழுத்து விடு
உன்னை நிதானப்படுத்திக்கொள்
உன் முன்பு யாரேனும் இருந்தால்
உன் உணர்வுகள் அவர்களுக்கு மறைக்கப்படட்டும்
மேலும் வாசிக்க

நீ காதலிக்கிறாய் என்னை...!

Posted by G J Thamilselvi On 2 comments
நிசப்தம் என்று எண்ணப்படுகிற
அந்த தருணம்
ஓசையின் குறை ஒலி தவிர
வேறொன்றும் இல்லை...
மேலும் வாசிக்க

நான்...? நீ...!

Posted by G J Thamilselvi On Thursday, 2 May 2013 7 comments

உன் அருகாமையில்
எனக்குள் தோன்றும் தயக்கங்களுக்கு
குழப்பம் என்று பெயர் சூட்டினாய் நீ
காதல் என்று எழுதிபார்க்கிறேன் நான்

வார்த்தைகளை கோர்வையாக்கி
உரையாடல் துவங்கும்போதே
குப்பை என்று தூக்கி எறிகிறாய்
குப்பைக்குள் உயிர்க்கும்
என் காதல் கருவை
சங்கடத்தோடு அடைகாக்கிறேன் நான்
மேலும் வாசிக்க

உழைப்பாளர் தினம்

Posted by G J Thamilselvi On Wednesday, 1 May 2013 5 comments

உழைப்பாளர் தினம் என்று
ஒரு நாளை ஒதுக்கி வைத்து
திருநாளாய் மாலை சூடி
வாழ்த்துக்கள் பரிந்துரைத்தால்
உழைப்பவர் மாண்பு செழித்திடுமா...?
மேலும் வாசிக்க