உன் வாச காற்றினிலே

Posted by G J Thamilselvi On Tuesday, 9 April 2013 9 comments

அழகாய் மலர்ந்தேன்
உன் நினைவலை தீண்டியதால்
உணர்வால் தகித்தேன்
உன் பார்வைகள் வருடியதால்


தீண்டாமலே மனதிற்குள் தீராத தாகம்
சேராமலே இதயத்தில் சீரான மோகம்
கனவுகள் இன்றியே நெஞ்சங்கள்
திண்டாட விசைகளின் தாக்கம்

இதுதானோ பருவத்தின்
இமை கிரக்கத்தின் பிறவி காலம்
இதுதானோ தவித்திடும்
இந்த தனிமையின் சுக கீதம்

விழிகளை மூடி தென்றல் காற்றில்
உன்னை தேடினேன்
மொழிகளை தீர்த்து தொடர் மௌனத்தில்
உன்னில் வாழ்கிறேன்

இதுவேதான் மன ஆழத்தின்
தொடர் ராகமோ
இனம்புரியா இந்த பாவனை
தினம் தொடர்ந்திடுமோ

அழகாய் மலர்ந்தேன்
உன் காலடி ஓசையிலே
சுகமாய் லயித்தேன்
உன் வாச காற்றினிலே

9 comments:

 1. காதல் உணர்வுடன் கூடிய
  உல்லாச மனத்தை
  அருமையாகச் சொல்லிப்போகும்
  கவிதை அருமையிலும் அருமை
  வாழ்த்துக்கள்

  ReplyDelete

 2. வணக்கம்!

  உன்வாசக் காற்றில் உயா்தமிழ் வீசுவதால்
  இன்னேசம் கொண்டேன் இனித்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 3. தாலாட்டும் வரிகள் அருமை... பாராட்டுக்கள்...

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. Replies
  1. மிகவும் நன்றி

   Delete