ஏன்...? எதற்காக...?

Posted by G J Thamilselvi On Friday, 26 April 2013 11 comments

வரையறுக்க முடியாததாக
செட்டைகள் அடித்து பறக்கிறது காலம்
காலம் கடக்க தவிக்கிறது
காலம் கடக்காமல் தவிக்கிறது
இரு புள்ளியில் ஒளிந்து
உருகி மறைகிறது வாழ்க்கை


அவமானப்படலுக்கும்
அங்கீகரிக்கப்படலுக்கும் இடையில்
ஊசலாடி ஊஞ்சல் குழந்தையாக
மகிழ்ந்து களிக்கிறது மனம்.

ஒதுக்கப்படலுக்கும் தனித்துவிடலுக்கும்
இடையில் ஆதாரம் தேடி
அலைந்து திரிகிறது மனம்.

மனதில் பதரடிக்கப்படுகிற எண்ணங்களில்
நெல் மணிகளாய் குவியப்படுவது
ஏக்கமும் தவிப்பும் புறக்கணிப்பும் தனிமையும்
தோல்வியும் சஞ்சலுமும்
இனம் புரியா பயமும்

பார்வை கோணங்கள் மாறுபடுவதால்
புரிந்துக்கொள்ளலும் புரியபடலும்
திரிபாக தோற்றம் பெறுகிறது

மொழிகள் கூட புரிபடாமல்
இலக்கணங்களை அழித்து
குழப்பங்களை குத்தகைக்கு எடுத்துக்கொள்கிறது

இந்த தனிமை நான் அறியவா...?
இந்த தனிமை நான் மறையவா...?
இந்த தனிமை நான் அழியவா...?
ஏன்...? எதற்காக...?

11 comments:

 1. /// பார்வை கோணங்கள் மாறுபடுவதால்
  புரிந்துக்கொள்ளலும் புரியபடலும்
  திரிபாக தோற்றம் பெறுகிறது ///

  நல்ல வரிகள்...

  தனிமை கொடுமை...

  ReplyDelete
 2. செட்டைகள் - சேட்டைகள்
  இது தனிமை - இந்த தனிமை

  ReplyDelete
  Replies
  1. நன்றி அய்யா செட்டைகள் - இறக்கைகள் என்று பொருள் இது தனிமை என்பதை மாற்றிவிடுகிறேன்

   Delete
 3. தனிமை, இனிமை சில நேரங்களில்,
  தனிமை, கொடுமை சில நேரங்களில்.

  ReplyDelete
  Replies
  1. மன நிலையே இனிமைக்கும் கொடுமைக்குமான திருப்பு விசை

   Delete
 4. அருமை அருமை...
  மையநோக்கு விசைக்கும்
  மையவிலக்கு விசைக்கும் இடையில் புவி ஈர்ப்பு விசையால்
  நாம் நிதர்சனித்து இருப்பது போல....
  வாசித்து மகிழ்ந்தேன்...

  ReplyDelete
 5. // இந்த தனிமை நான் அறியவா...?
  இந்த தனிமை நான் மறையவா...?
  இந்த தனிமை நான் அழியவா...?
  ஏன்...? எதற்காக...? //

  தனிமை அழிவதற்கு அல்ல! “ பசித்திரு, தனித்திரு விழித்திரு” – என்று சொல்லுகிறார் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார்.

  ReplyDelete
 6. மொழிகள் கூட புரிபடாமல்
  இலக்கணங்களை அழித்து
  குழப்பங்களை குத்தகைக்கு எடுத்துக்கொள்கிறது/

  ரொம்ப அருமை (ஆம் சில நேரம் தடுமாற்றம் வரும் மொழியுடன் கூட )

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் விழி

   Delete