நட்பின் சிநேகிதி

Posted by G J Thamilselvi On Tuesday, 2 April 2013 3 comments
சின்ன குட்டி ரெக்க வச்சு
பறக்குது பட்டாம் பூச்சி
பிஞ்சு விரல் தொட்டு தொட்டு
கிச்சு கிச்சு மூட்டி விட்டு
வந்து நிக்கும் எனக்கொரு
நட்பின் சிநேகிதி


வாடி என் செல்லகுட்டி
வானம் வரை பறந்திடுவோம்
கைகளை மெதுவாய் வீசி
மேகத்தை உரசிடுவோம்

தென்றலுடன் போட்டிக்கு நின்று
செல்ல சண்டைகள் போட்டு வைப்போம்
செடிகளின் இடையில் பறந்து
பசுமையை கவர்ந்திடுவோம்

விண்ணுக்கும் மண்ணுக்கும்
தாவிடும் வித்தகர் நாங்கள்
வண்ணத்தில் சிறப்பிக்கும்
ஆனந்த தாண்டவம் நாங்கள்

ஊரை சுற்றி நீ பறக்க
உன்னை சுற்றி வலம் வருவேன்
என்னை நீ தீண்டும் போது
ரசித்து நான் சிறகடிப்பேன்

என் இனிய சிநேகிதி உன்னை
கண்களில் படம்பிடிப்பேன்
இதயத்தில் சிறை கம்பி வைத்து
நட்பிற்குள் அடைத்து வைப்பேன்

மஞ்சள் வண்ண மலர்கள் எங்கும்
உன்னுடன் நான் ரசிப்பேன்
தேன் உறிஞ்சும் உன்னை கண்டு
விழிகளை வியப்பினில் விரிப்பேன்

உன்னை நிறங்களில் வரைந்தவன் அவனை
நிஜத்திலும் தேடி செல்வேன்
கற்பனை களஞ்சியம் அவனை
நெஞ்சினில் நான் சுமப்பேன்

அவனிடம் அறிவை கொஞ்சம்
உறவாட கேட்டு வைப்பேன்
உலகினை அழகாய் மீண்டும்
அன்புடன் வடிவமைப்பேன்

3 comments:

 1. /// ஊரை சுற்றி நீ பறக்க
  உன்னை சுற்றி வலம் வருவேன்
  என்னை நீ தீண்டும் போது
  ரசித்து நான் சிறகடிப்பேன் ///

  மிகவும் ரசித்த வரிகள்... தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. பட்டாம் பூச்சியுடன் சிறகடிக்கின்றது கவிதையும்..

  ReplyDelete

 3. சின்ன குட்டி ரெக்க வச்சு
  பறக்குது பட்டாம் பூச்சி

  அருமையான வரிகள்.

  ReplyDelete