சிநேகிதியே...!

Posted by G J Thamilselvi On Wednesday, 10 April 2013 10 comments

பல நாள் பொழுதில்
உன்னோடு பேசிய வார்த்தை
தினம் நான் தனியே
என்னோடு பேசுகிறேன்


அடியேய் உனை நான்
கோபித்த பொழுதுகள் எல்லாம்
துணையாய் இன்று
என்னோடு தொடர்ந்திட கண்டேன்

பிரிவில்லை என்று சொன்னோம்
உடல் பிரிந்தே இரு தீவாய் நின்றோம்
விழிகள் கரைய சென்றோம்
விழி அகல கட்டிக்கொண்டோம்

கற்றிடும் பருவத்திலே
இடை புக ஒருவருக்கும்
துணிவில்லையே...!
இடை வரும் உறவிற்கோ
நம் நட்பது புரிவதில்லையே...!

காற்றை அடைத்து வைத்து
கவி சொன்ன நாட்களிலும்
கைகள் தினம் கோர்த்து
கால் நடந்த பொழுதுகளிலும்
பிரிவொன்று உண்டு என்று
பிரிந்தேனும் சிந்திக்கவில்லை

காதல் அது உள்ளத்தில் நின்றும்
நட்பே என்று தழுவிச் சென்றோம்
நமக்காக உயிர் துறக்க
நாமே முன் நின்றோம்

மாவடு பார்க்கும் பொழுது
காக்காய் கடி நினைவிற்கு வருதே
உப்புடன் புளியங்காய்
நாவுடன் கொஞ்சம் எச்சில் தருதே

காட்டு மலர்கள் கீரிடம் ஆக
மூங்கில் குச்சி செங்கோல் ஆக
வயற்காட்டை நாடாய் ஆண்ட
பொழுதுகள் நெஞ்சை சுடுதே

செம்மண் புழுதியில் சரிந்து
காற்றிலே விண்மீன் வரைந்து
வானத்தில் பதித்த நாட்கள்
மீண்டும் வர துணிவில்லையே

கனவிலே வந்த கணவன்
காற்றில் அட கரைந்தே போனான்
நிஜ உலகில் வந்தவன் அவன்
தீ பொறியாய் நெஞ்சை சுட்டே சென்றான்

தொலைத்திட்ட காலங்கள் தேடி
மீண்டும் மனம் தொடர்ந்திடும் பயணம்
இருட்டிற்குள் கரையும் கண்ணில்
கண்ணீரில் உயிராய் கரையும்.

10 comments:

 1. தோழியின் நட்பு ஆழமானது என்பதில் சந்தேகமில்லை

  ReplyDelete
 2. இடையில் வரும் பல உறவிற்கு பல உண்மைகள் புரிவதில்லை... புரிந்து கொள்ள விருப்பப்படுவதுமில்லை...

  ReplyDelete
  Replies
  1. நிதர்சனமான உண்மை அய்யா

   Delete
 3. தொலைத்திட்ட காலங்கள் தேடி
  மீண்டும் மனம் தொடர்ந்திடும் பயணம்
  இருட்டிற்குள் கரையும் கண்ணில்
  கண்ணீரில் உயிராய் கரையும்.//

  பிரிவின் துயர் உணரச் செய்யும்
  அருமையான படைப்பு
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. மனதை உருகியதே என் நினைவலைகளை எழுப்பியதே ஆம் நமகாக உயிர் துறக்க நாமே நின்றோமோ ..........அருமையான கவிதை

  ReplyDelete
 5. போகட்டும் இங்கு நாம் புதிதாய் மறுபடியும் துவங்குவோம் உங்களுகான என் நட்பு காத்திருக்கிறது

  ReplyDelete
 6. "கைகள் தினம் கோர்த்து
  கால் நடந்த பொழுதுகளிலும்
  பிரிவொன்று உண்டு என்று
  பிரிந்தேனும் சிந்திக்கவில்லை"

  உண்மை வரிகள்.

  ReplyDelete
 7. என் தோழியை நானும் தேடிக்கொண்டிருக்கிறேன்...

  தேடல் ஒரு புறம் இருக்கட்டும் நாம் இணைவோம் இனி...

  ReplyDelete
  Replies
  1. நட்பு நம்மில் வாழும் சசி

   Delete