பிரிகிறது இந்நாள்

Posted by G J Thamilselvi On Friday, 19 April 2013 3 comments
உன் அணைப்பிற்குள்  இணைந்திருக்கையில
காலத்தின் கால்களில் விமானத்தின் இறக்கைகள்
சடுதியில் செட்டைகள் விரித்து
காற்றை கிழித்து விரைந்து பறக்கிறது.


காலம் என்பதே இல்லையாம்
தெரியுமா உனக்கு
எனக்காக ஒதுக்கப்படாத காலத்திற்காகதான்
சண்டையிடுகிறேன் தினமும் உன்னிடத்தில்

நீ பேசும் போது உன்னோடு இணைந்து
என் காலமும் கரைந்து போகிறது
பேசாத நாட்கள் காலத்தால் நீண்டு பரிகசிக்கிறது
பக்குப்படாத என்னிடம் காதல் பக்குவம்
பசுமைக்குள் விரிந்து சிரிக்கிறது

ஏதோ ஒரு ஏலியனோ...தேவதூதனோ
உன்னிடத்தில் என் காதலை விளக்கினால்
சுகத்திற்குள் சிலிர்க்கும் சுகம் தான்
காற்றையும் மேகத்தையும்
அன்னத்தையும் தூதுவிடமுடியவில்லை
ஏக்கத்தோடு பிரிகிறது இந்நாள்3 comments:

  1. அருமையான காதல் உணர்வுகளை வெளிப்படும் வரிகள். நன்று.

    ReplyDelete
  2. உங்களுடைய வலைத்தளத்தை வடிவமைக்கவும், மாற்றங்கள் செய்யவும் நீங்கள் என்னை அணுகலாம். தொடர்புகொள்ள: 9865076239, மின்னஞ்சல் palanivel.nhai@gmail.com

    ReplyDelete