கிறுக்கல்கள்

Posted by G J Thamilselvi On Saturday, 9 March 2013 2 comments

வெள்ளை காகித்த்தை பார்த்த்தும்
பரபரக்கும் எனது கை
எழுதுகோலை தழுவி
வார்த்தைகளை பிரசவிக்க,

மனதில் கருத்தரித்த
கருத்துக்களின் வார்ப்புகளை
நேர்த்தியாய் கிறுக்கி செல்லும்
குழந்தைகளின் ஆரம்ப சுழி
எழுத்துக்களை போல

சில நேரம் கவியாகவும்
பல நேரம் என் மன
எண்ணங்களின் கிறுக்கல்களாகவும்

உற்பவிக்கும் எழுத்து மலர்களை
தொடுத்த பின் சூடி பார்க்கையில்
நானே முதல் ரசிகையாகிறேன்

உதட்டில் சுழியும் புன்னகையும்
வார்தைகளில் பாவும் விழி பாவையுமாய்
படைப்பாளியை கடந்து வாசகியாகிறேன்.

என் எழுத்துக்களின் முதல் ரசிகை
உணர்வோடு உயிர்ப்போடு
காதாபாத்திரங்களோடு பயணிக்கும்
நானே முதல் ரசிகை.

2 comments:

  1. எதிலும் அப்படித்தான் இருக்க வேண்டும்...

    அப்போது தான் எந்தப் பிரச்சனையும் வர வாய்ப்பே இல்லை...

    ReplyDelete