ஓர்மைக்குள் உயிர்த்திருப்போம்

Posted by G J Thamilselvi On Friday, 8 March 2013 2 comments

மண்ணில் விழும் மழையில்
ஒரு துளியாய் தரை விழுந்தேன்
என்னை தழுவிடவே மறுதுளியாய்
என்னில் விழுந்தாய்.

செஞ்சேற்றில் கலந்து நாம் அங்கே
கரைந்தே போனோம் மண்ணோடு
நெல்நாற்றின் சிறிய வேர்பற்றி
உயிர்த்தோம் அந்த காற்றோடு

நெல்மணியாய் முதிர்ந்த போதும்தான்
காதல் கற்றோம் மனதோடு
உயிரும் உணர்வும் உருகி மனதில்
இதயவழியில் காதல் உயிர்த்தது கண்ணோடு

பிரிந்து நின்ற பிறகும் கூட
பிரிவு துயர் வாட்டவில்லை
நினைவில் இணைந்து பயணம் செய்தோம்
புற உலகின் தடையும் இல்லை.

கண்டதெல்லாம் கனவே என்று
புரட்டி போட துணிவுமில்லை
இதயக் கூட்டில் உயிர்த்த உன்னை
பிரித்தெடுக்க வழியும் இல்லை

உடலும் உயிரும் ஆனாய்
என் அணுவின் ஆன்மா நீ ஆனாய்
அறிவின் பயண வழியில்
என் கரம் பற்றி நடக்கும் துணையானாய்

சுற்றி இருப்பதெல்லாம்
மாயை என்று சொன்னாய்
காதல் மாயைக்குள்
என்னை பருகிச் சென்றாய்

மனம் தீண்டி எனைதாண்டி
எண்ணக் கூட்டை கலைத்தவன் நீ
காதல் சிறகோடு கை வீசி
என்னுள் எங்கும் பறந்தவன் நீ

நீயோ இல்லை நானோ
என்று பிரிந்து வாழும் எண்ணமில்லை
தீயுடன் காற்றாகி துணிந்து
ஒளிர்ந்திட துடிக்கின்றேன்
ஒர்மை என்றொரு நிலையுண்டு
உன்னுள் உறைந்திட வழியும் உண்டு.

2 comments: