எல்லாம் நானாக

Posted by G J Thamilselvi On Saturday, 30 March 2013 2 comments
எழிலாக வடிந்திருக்கும்
இவ்விடத்தில் தான்
நாமக்கான நினைவுகளோடு
என் காலம் நேர்த்தியாய் கடக்கிறது


எப்போதும் உன் நினைவுதான்
அதுமட்டுமே என்னோடு
நெருக்கமாக பிணைந்திருக்கிறது
சில நேரம் இன்பமாக
பல நேரங்களில்
புரிதல் அற்ற குழந்தைதனத்தை
நொந்தபடி...

உன் நினைவு புற உலகை
மறக்கச் செய்கிறது
காலணி அணிய மறந்து
தகிக்கிற மணற்பரப்பில்
பதிந்துவிட்டேன் பாதங்களை
பாதங்களுக்கு மொழியிருந்தால்
ஏசியிருக்கும் உக்கிரமாக

உன் நினைவுகளோடு
கடத்திவிட்ட காலத்தை
நிறுத்து பார்க்கிறேன்
எல்லாம் நானாக நின்று

சிரிக்கிறது ஏளனமாக

2 comments:

 1. அருமை...

  அந்தளவிற்கு சுடும் நினைவுகளை அகற்றிட வேண்டியது தான்...

  அதற்கு முன்...

  உங்கள் தளத்திற்கு Google chrome மூலம் வர முடியவில்லை... காரணம் : udanz

  கருத்திட்ட வரும் நண்பர்களுக்கு :

  நண்பர்களின் பல தளங்களுக்கு செல்ல முடியவில்லையா...? udanz இணைத்துள்ள எந்த தளத்திலும் உங்களால் செல்ல முடியாது... Google Chrome browser-ல் உங்களின் பதிவுகளை அவர்களால் வாசிக்க முடியாது... Malware என்று வரும்... சரியானவுடன் (??????) இவைகளை இணைத்துக் கொள்ளலாமா...? வேண்டாமா...? உங்கள் விருப்பம்...

  தங்களின் தளத்தில் udanz ஓட்டுப்பட்டை அல்லது Logo வைத்திருந்தால் எடுத்து விடுங்கள்... எப்படி...? :-

  மேலும் விவரங்களுக்கு : http://facebook.com/dindiguldhanabalan

  அன்புடன் DD
  http://dindiguldhanabalan.blogspot.com

  ReplyDelete
 2. தங்களின் அன்பிற்கு நன்றி அய்யா

  ReplyDelete