உன் அணைப்பில்

Posted by G J Thamilselvi On Thursday, 7 March 2013 6 comments
கண்ணிமை மூட கண்களும் ஏங்க
நெஞ்சமும் வாட ஏக்கமும் கூட
கள்வனே உனை தேடி நான் ஏங்கினேன்.

சித்திரம் போல சில்வண்டு பேச
நிலவின் இருக்கையில் உன் இருக்கை
அணைப்பின் ஈர்ப்பில் நான்

அங்கு மௌனங்கள் பேசுகிறது
மனங்கள் பிணைகிறது
காதலின் இன்னிசையில்

காற்றிற்கும் மனமில்லை
நம் இடை புகுந்து
பிரித்து செல்ல

நட்சத்திரங்கள் வெட்கத்தில்
இடம்பெயர்கின்றன
நம் நெருக்கத்தின் 
நிகழ்வுகளை கண்டு

மேகங்கள் திரையாகி 
மறைக்கிறது நம்மை
தேகங்கள் பிணைந்துருகுமோ
என்ற சந்தேகத்தில்

நமக்கு மட்டுமே தெரியும்
அணைப்பை மறந்த
பேச்சின் ரசிப்பின் ரசனையில்
நாம் என்று.

6 comments:

 1. நட்சத்திரங்கள் வெட்கத்தில்
  இடம்பெயர்கின்றன
  நம் நெருக்கத்தின்
  நிகழ்வுகளை கண்டு///
  அருமை ஆனாலும் எனக்கு பொறாமை உங்களைபோல எழுத முடியலையே என்று

  ReplyDelete
  Replies
  1. நன்றி, நீங்களும் நன்றாகவே எழுதுகிறீர்கள்

   Delete

 2. வணக்கம்!

  தோழி! உன்றன் கவிகண்டு
  சொக்கிப் போனேன்! வலையுலகில்
  வாழி என்றே விருத்தத்தில்
  வாழ்த்துப் படைத்து மகிழ்கின்றேன்!
  கோழி! சேவல்! எவ்வுயிரும்
  கொள்ளும் காதல்! உயரியற்கை!
  ஊழிக் காலம் வந்தாலும்
  உண்மைக் காதல் அஞ்சிடுமோ?

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 3. மௌனங்கள் பேசுகிறது
  மனங்கள் பிணைகிறது
  காதலின் இன்னிசையில்//
  நல்ல வரிகள் கவிதை சிறப்பு

  ReplyDelete
 4. /// நமக்கு மட்டுமே தெரியும்
  அணைப்பை மறந்த
  பேச்சின் ரசிப்பின் ரசனையில்
  நாம் என்று. ///

  ரசித்தேன்...

  ஒரு நாளில் ஒரு பகிர்வை பகிர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. நல்ல கூடலான கவிதை அருமை

  ReplyDelete