என்னை நீ மாற்றிவிடு

Posted by G J Thamilselvi On Tuesday, 5 March 2013 1 comments

இந்த இசை எங்கே உதிக்கிறது
என் கனவங்கே பிறக்கிறது
சுட்டி விழும் நீர் துளிகள் மண்தரையில்
அதன் அணைப்பின் ஓசையோ மனசெவியில்
பட்டெழும்பும் இறக்கை ஒலி வான்வெளியில்
காற்றுக்கிழியும் இசை என் மனவெளியில்


மாலை மஞ்சள் தகட்டிற்குள் முகம் புதைத்து
இளஞ்செம்மண் சிவப்பாக எனை நிறுத்து.
கண்ணீர் துளிகளுக்குள் கவி வடித்து
விடிவெள்ளி பெண்ணாக என்னை உரமேற்று.

தூற்றுவோர் தூற்றட்டும் என்றும்
தூற்றும் மனம் சிறத்திட வாழ்த்தும்
இன்னல்கள் செய்தார் எல்லாம்
இனிமைகள் காணிட செய்யும்
விடிவெள்ளி பெண்ணாக என்னை உரமேற்று.

உணர்வுகள் விரிந்திட்ட மனதில்
நெகிழ்ச்சிகளை அகற்றிவிடு
துவண்டு விழும் மனநிலை என்னை
முற்றிலும் மாற்றி கொடு

ஞானப் பெண்ணாக எனை மாற்று
என் ஞானம் உருக்காகும் குணம் ஏற்று
பாரதியின் துணிச்சல் வேண்டும்
அன்னை தரேசாவின் அன்பு வேண்டும்
விவேகானந்தரின் அறிவு வேண்டும்
செருக்கில்லா நேசமொழி பேசும்
நாக்கிற்கு திறமை வேண்டும்.

கண்கள் அதில் கண்ணியம் என்றும்
தீப்பிழம்பாய் துள்ளிட வேண்டும்
பெண் இவளின் துணிச்சல்
புவி எங்கும் பரவிட வேண்டும்

உன்னிடம் என்னையே கொடுத்தேன்
உயிர் பொருள் சமர்ப்பணம் செய்தேன்
நெஞ்சினில் வஞ்சம் அகற்றி
என்னை நீ மாற்றி விடு.

1 comment: