ஆசைகள்

Posted by G J Thamilselvi On Saturday, 30 March 2013 2 comments
வானத்தில் எழுதப்பட்ட
வானவில் ஓவியத்தில்
ரம்மிய குவியலாய்
இசைந்திருக்க ஆசைதான்


இவ்விடத் தனிமையில்
உன்னிடம் சரண் புக
ஜென்மங்கள் தோறும்
ஆசை தான்

கண்களால் கண் கவ்வி
களவியற்று பிரிந்திருக்க
உள்ளத்தால் உறவுகொள்ள
ஆசை தான்

உன் தோள்தனில்
தலை சாய்த்து
நீ பேசும் மொழி
கேட்க ஆசை தான்

உன் விரல் கூடுதனில்
என்விரல் பிணைந்திருக்க
நான் கரைந்து நாம் கரைந்து
உருகி போக ஆசைதான்


2 comments:

  1. ரசிக்க வைக்கும் ஆசைகள்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete