துணிவின் உயர்வு நிலை

Posted by G J Thamilselvi On Tuesday, 26 March 2013 6 comments
நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்
என் ஒவ்வொரு வலிகளில் இருந்தும்
நான் காயப்பட்டேன்
இயேசுகிறிஸ்துவை போல்
என் உடல் வதைப்பட்டு
குருதி வழியவில்லை அவ்வளவே

என் இதயத்தின் இரத்த நாளங்களை
பிழிந்து செல்லும் வதைகளைபற்றி
சிந்திக்க துணிந்தேன் நான்
வெகுண்டெழலாம் வார்த்தைகளில்
கடுமை தீட்டி குத்திப்பார்க்கலாம்
அணுவின் உட்பொருள் ஒன்றில்

நான் அன்பானவள் தான்
அந்த நிச்சயத்தின் இறுதி
துளியிலும் என் நேர்மை
சிரித்துக்கொண்டிருக்கும்
கசிந்து உருகும் காயங்கள்
என்னில் மையல் கொண்டாலும்
அவை என்னோடு ஒட்டி பிறக்கவில்லை

குட்டியபின் குனிந்து போக
நான் ஒன்றும் ஏழை பாமரத்தி அல்ல
துணிந்து நேர் நிற்கும்
பாரதி பைங்கிளி
கொஞ்சம் சீண்டுங்கள்
யார் இருப்பினும் என் மனம்
வலிமை பெறட்டும்
முடிந்தவரை காயப்படுத்துங்கள்
என் மனம் இரும்பாகட்டும்

இதய சதையை ஊசிக்கொண்டு
குத்தி பாருங்கள்
உங்கள் வக்கிரம் விடைபெறட்டும்

நன்றி சொல்ல வேண்டும் உங்களுக்கு
உங்கள் செயல்களால்
நான் மெருகேறினேன்
வசைகளால் வைரம் ஆனேன்
முடங்கி போக நான் ஒன்றும்
வயிற்றுக்காக வாழும்
விலங்கினமல்ல
துணிவின் உச்சம்
காளியின் மறு அம்சம்.

6 comments:

 1. /// முடிந்தவரை காயப்படுத்துங்கள்
  என் மனம் இரும்பாகட்டும் ///

  அந்த மனஉறுதி வேண்டும்...

  ReplyDelete
 2. /// துணிவின் உச்சம்
  காளியின் மறு அம்சம்.///

  மேலும் சிறப்பு... வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 3. இனிய தமிழ் - ஓட்டுப்பட்டை அல்லது லோகோ - ஏதேனும் இருந்தால் எடுத்து விடுங்கள்... தளம் திறக்க அதிக நேரம் ஆகிறது... ஒரு வாரமாக அந்த திரட்டி வேலை செய்யவில்லை...

  ReplyDelete

 4. இதய சதையை ஊசிக்கொண்டு
  குத்தி பாருங்கள்
  உங்கள் வக்கிரம் விடைபெறட்டும்//

  இங்கு மட்டும் புரியவில்லை யாரை நோக்கி
  மற்றபடி கவிதை மனதை ஊடுருவியது

  ReplyDelete
 5. //முடிந்தவரை காயப்படுத்துங்கள்
  என் மனம் இரும்பாகட்டும்
  //

  அருமையான வரிகள்..

  ReplyDelete
 6. வதைகளிலும்.. வலிகளிலும் மீண்டு.. மீண்டும் உச்சம் செல்லுங்கள் ஃபீனிக்ஸ் பறவையாய்..
  வெற்றி நிச்சயம்..!

  ReplyDelete