நீ என்னவன் என்கிறேன்

Posted by G J Thamilselvi On Tuesday, 19 March 2013 3 comments
என் முகமூடியை கழற்றினேன்
அந்த பொய்முகத்தை தீயிலிட்டேன்
இப்போது பாரேன்
என் இதய அழகு புலப்படுகிறதா...?
பொறாமையை தீயிலிட்டு பொசுக்கினேன்

கொஞ்சம் வெற்றிடம் தோன்றியது
எதை கொண்டு நிரப்ப
தயை என்னும் மலர்கொட்டப்பட்டது
வெற்றிட நிரப்புதலில்
மணங்கமழ்கிறது இதய பரப்பில்
அந்த மணம் உன் நாசியை
தீண்டவில்லையா...?
ஆசையை அழித்துவிட்டேன் என்கிறேன்
உன்னோடு வாழ்தலான ஆசை
துளிர்த்த தளிர்த்து மரமாகிறது
வேர் தோண்டி வெட்டிவிட பார்த்தேன்
காதலின் ஆணிவேரோ
என்னிடத்தில் இல்லை
உன்னிடத்தில் நின்று பரிகசிக்கிறது
என்னை அவஸ்தைக்குள் தள்ளி
இறைவா எனக்காக நீயே வந்துவிடு
என் பிரார்த்தனையின் வடிவாக
வந்தும் நின்றாய்
நீ என்னவன் என்கிறேன்
அடையாளம் என்ன கேட்கிறாய் நீ
என் நிரூபித்தல் அடையாளம்
நீ நீ நீ மட்டுமே

3 comments:

 1. ஆசையை ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. என் இதய அழகு புலப்படுகிறதா...?//

  புலபட்டது

  ReplyDelete
 3. சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete