இதய திருமகனே...!

Posted by G J Thamilselvi On Tuesday, 12 March 2013 17 comments

விடியலை வரவேற்க
விழித்திங்கு காத்திருந்தேன்
இதழியல் படிக்க வந்து
இதயத்தை திருடிச்சென்றாய்

சிந்தனை கூடுடைத்து
போர்க்களம் ஆக்கி வைத்து
நன்மையும் தீமையுமாக
எண்ண வீரர்களை முடுக்கிவிட்டாய்


நடுநிலை நின்று விட தவிக்கிறேன்
அதுவும் சமநிலையற்ற மனதின் நிலை
உன் நினைவலை தேக்கி வைத்து அணைக்கிறேன்
உணர்ச்சியின் குவியலாய் ஒரு நிலை

முன்பிருந்த ஒன்றன் பின்
செல்கிறது என் பயணம்
புதியது இதுவென்று
நினைக்கிறேன் தின தருணம்
அகண்டு செல்லும் மனவெளியில்
புதியதாக ஒன்றும் காணோம்
காணும் காலம் பொருட்டு அது
புதியதாக மனதில் தோன்றும்

நிற்க....சிந்தித்தேன்
தனித்து வந்தேன்... தனித்தே செல்வேன்
பயணித்த காலச் சுவடுகளை
தேக்கி செல்வேனோ....?
சொல்வதற்கில்லை....!

நரை முடி வரவேற்கும்
சுருக்க வரி முகம் எழுதும்
முளைகளோ புவி நோக்கும்
பற்களோ விடைபெற்று
பொக்கையாய் மழலை தொற்றும்

கூன் விழுந்து கொம்பு ஊன்றி
தனித்து போகும் வேளையும்
எங்கோ நின்று உன் முகம்
எட்டி பார்க்கும்.

உயிர் கூட்டில் நின்று
உயிர் பிரிய உருக
சுற்றங்கள் சுற்றி நிற்க
பால் ஊற்றி வழி அனுப்ப
துளித் துளியாய் ஊற்றி வைக்க

அக்கணம் உன் பெயரே
சிந்தனைக்குள் வந்து போகும்
உனக்கு முன் நான் என்றால்
உன் மடியில் நானும்
எனக்கு முன் நீ என்றால்
என் மடியில் நீயுமாக

சிந்திக்க மன வலி துணிவில்லை
உன்னுடனே உயிர் பிரிய
உணர்வு கொண்டேன்
இதயத் திருமகனே...!

17 comments:

 1. Replies
  1. கவிதைக்கான பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன் சார்

   Delete
 2. ///கூன் விழுந்து கொம்பு ஊன்றி
  தனித்து போகும் வேளையும்
  எங்கோ நின்று உன் முகம்
  எட்டி பார்க்கும்.///

  பெற்ற மனம் பற்றிய
  உண்மையான வரிகள்..

  கரு சுமந்த வயிற்றில்
  அவர்கள் உயிரோடு இருக்கையிலேயே
  எரியூட்ட வேண்டாம்....

  ReplyDelete
  Replies
  1. இந்த கவிதைக்கு இப்படியும் ஒரு அர்த்தமா....? இந்த கவிதை தாய்மையைக்குறித்தானதல்ல காதலை குறித்தானது

   Delete
 3. கடைசி வரியில் கரைந்து போனேன்.. அருமை..!

  ReplyDelete
 4. மிக மிக அற்புதமான வரிகள். மனதை நெருடியது. சபாஷ்! தொடர்ந்து எழுதுங்கள்..

  ReplyDelete
 5. உங்களின் தளம் பற்றிய சிறு விளக்கம்,
  காண:http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_15.html

  ReplyDelete
 6. அழகிய கவிதை. . . அருமையான வரிகள். . .

  ReplyDelete
 7. நான் உங்கள் 50 வது follower. . ஸ்வீட் கொடுங்க. . .

  ReplyDelete
 8. உனக்கு முன் நான் என்றால்
  உன் மடியில் நானும்
  எனக்கு முன் நீ என்றால்
  என் மடியில் நீயுமாக

  வரம் வாங்கிய வரிகள்...

  ReplyDelete
 9. வணக்கம்

  வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் மனதை உருகவைக்கும் வரிகள் பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/03/blog-post_15.html

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 10. உயிரோட்டமான கவிதை அக்கா

  ReplyDelete
 11. உயிரோட்டமுள்ள கவிதை

  ReplyDelete