நிஜவுலகம் கலைவதென்ன...?

Posted by G J Thamilselvi On Monday, 11 March 2013 5 comments


கவலைகள் இல்லாத உயிர்களும் இல்லை
உலக கூட்டுக்குள்ளே
கனவுகள் சொல்லாத இதயங்கள் இல்லை
புவியின் ஏட்டுக்குள்ளே
இது உண்மை....இது மெய்மை....
உடன் தொடரும் நிகழ் மென்மை

கூரைக்குள்ளே பொழியும் மழையின்
குளிரில் கரையும் இந்திய கவலை
ஓசோனில் கிழிசல் தைக்க ஊசி கேட்கும்
அமெரிக்காவின் கவலை

பார்த்தவுடன் பற்றிட தவிக்கும்
மழலையின் கவலை
காதலின் வலியை கடக்க துடிக்கும்
பருவத்தின் கவலை

ஊன்றுகோலாய் துணைக்கு ஏங்கும்
முதுமையின் கவலை
உலகை எல்லாம் வென்றிட துடிக்கும்
இளமையின் கவலை

போலியாய் வாழ்கிறோம்
உண்மையை மறைக்கிறோம்
துணிச்சலை புறந்தள்ளி
உணர்வுகள் புதைக்கிறோம்

வெந்ததை தின்று நாம்
உயிரையும் வளர்க்கிறோம்
காலத்தை கடத்தியே
மண்ணிற்குள் புதைகிறோம்

கண்களை மூடியே
பாதையில் நடக்கிறோம்
பார்த்திடும் காட்சியை
எளிதாக அழிக்கிறோம்

பெண்மையை கண்டு ஆண்மை
வெறிக்கொள்வது ஏனோ
ஆண்மையை கண்டு பெண்மை
பயம் கொள்வது வீணோ

அற்பமாய் இங்கு நிகழும் செயல்கள்
மண்ணில் புதைந்திடுமோ
சொற்பமாய் ஒழுக்கம் எங்கோ நின்று
கதறி அழுதிடுமோ

இது என்ன...?
நிலை மாறும் வழி என்ன?
கனவுலகம் அழிவதென்ன...?
நிஜவுலகம் கலைவதென்ன...?

5 comments:

 1. /// சொற்பமாய் ஒழுக்கம் எங்கோ நின்று ///

  அதான்...

  ReplyDelete
  Replies
  1. எதான் சார் எப்பவும் வாக்கியத்தை முடிக்கவே மாட்டீங்களா....?

   Delete

 2. வணக்கம்!

  நல்ல கருத்துகளை நன்றே படைத்துள்ளீா்
  சொல்லில் அமுதைச் சுரந்து!

  பழம்போல் கவிகள் படித்துச் சுவைக்கத்
  தமிழ்ச்செல்வி தந்தார் தழைத்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் அய்யா

   Delete
 3. நல்ல கவிதை! கவலைகள் தீரட்டும்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete