தினம் என் பயணம் - 5

Posted by G J Thamilselvi On Sunday, 10 March 2013 7 comments

வாழ்க்கை ஒரு நூதன போராட்டம். அதில் எப்போது மகிழ்ச்சி வரும், எப்போது  துன்பம் வரும் என்று தெரிவ்தில்லை. ஒவ்வொரு நிகழ்வும் ஒரு அனுபவ பாடத்தை நடத்தி செல்லும். அதிலிருந்து ஆயிரம் விடங்களை கற்றுக்கொள்ளலாம். அல்லது துவண்டு போய் வாழ்க்கையை இழந்தும் விடலாம். எதிர்கொள்ள துணிவில்லாமல் போகும் போது குழப்பங்கள் இரத்தம உறிஞ்சும் அட்டையாய் படையெடுப்பது உண்டு.

06.03.2013 புதன்கிழமை அன்று திருவண்ணாமலை செல்வதென்று முடிவெடுத்திருந்தேன். எனது நண்பரான ஷமீர் அகமதுவிற்கு திருவண்ணாமலையில் ஏதும் வேலையிருப்பின் என்னுடன் வரும்படி கூறினேன். இதற்கு முன்பும் நாங்கள் இப்படி பயணித்த்து உண்டு கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு பிறகு மீண்டும் திருவண்ணாமலை பயணம். இதில் இரண்டு காரியங்கள் எனக்கு நடக்க வேண்டியிருந்த்து.


1. ஒரு முஸ்லீம் பெரியவருக்கு நான் மூன்று சக்கர வாகனம் வாங்கி தருவாதாக கூறியிருந்தேன் அதை கொண்டு வந்து அவரிடம் சேர்ப்பது.

2. எனக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனம் வேண்டி மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பம் தருவது

நாங்கள் எப்பொழுதும் பயணிக்கும் ஆட்டோவின் டிரைவர் சவுதி போனபிறகு நாங்கள் எங்கும் பயணிக்கவில்லை. ஒவ்வொரு பயணத்தின் போதும் ஒரு புதிய அறிமுகத்தை ஏற்படுத்திக்கொள்வோம். போன பயணத்தின் போது தமிழரசி எங்களுக்கு நட்பானாள். அவளை டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத சென்ற போது கண்டெடுத்தோம். தற்போது அவள் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்று திமிறியில் தட்டச்சராக பணிபுரிகிறாள். அவளும் எங்களை போன்று மாற்று திறனாளிதான். அவளை தூக்கமுடியாமல் அவளுடைய அண்ணா சிரமப்பட்ட போது ஷமீர் அழுதுவிட்டான். எனக்கு அப்பொழுது எதுவும் தோன்றவில்லை. என்னையும் என் தம்பியோ அப்பாவோ அல்லது நட்புவட்டத்தில் யாரேனுமோ படிகளில் ஏறும் போது வெகு தூரம் நடக்கும் போது தூக்கிக்கொள்வது உண்டு தான்.

ஆனால் அவன் கண்ணீரை பார்த்த போது அன்று என் கண்களும் கலங்கி தான் போனது.

எங்களோடு வருகிற ஆட்டோ டிரைவர்களும் அந்த பயணத்தின் போது எங்களோடு நட்பாகிவிடுவார்கள். இந்த முறை நாங்கள் ஆட்டோவிற்காக அலைந்த போதுதான். ஆட்டோ நண்பரான முபாரக் எங்கள் பயணத்தில் எத்தனை முக்கியமானவராக இருந்திருக்கிறார் என்பது புரிந்த்து.

ஷமீர்தான் எப்படியோ ஒரு ஆட்டோவை அழைத்துக்கொண்டு வந்தான். பயணத்தின் போது எனக்காக சோத்து மூட்டையை தூக்கிவருவது அவனின் வாடிக்கை.

அந்த ஆட்டோவில் சென்று நாங்கள் மூன்று சைக்கிள் மேலே கட்டி வருவதற்காக கயிறு வாங்கி கொண்டு கொஞ்சம் தூரம் தான் போய் இருப்போம். அதற்குள் அந்த ஆட்டோ டிரைவருக்கு ஒரு அலைபேசி அழைப்பு, ஆர்டிஓ வருவதாக. மன்னிப்பு கேட்டு வேறு ஆட்டோவில் மாற்றிவிட்டார். வேறு ஆட்டோ மாறி ஏறுவது ஷமீருக்கு இலகுவாக இருந்த போதும், எனக்கு மிகவும் சிரம்மாகவே இருந்த்து.

நாங்கள் செங்கமில் இருந்து திருவண்ணாமலை சாலையில் கரியமங்கலம் கடந்த போது லேசாக தூரியது. மழை எனக்கு பிடிக்கும் என்பதால் என் கைகளை தூரலில் நனைத்தபடி வந்தேன். தூரல் பெருமழையாகியது. அந்த நேரத்தில் சாலையில் வெண் குமிழ்கள் விழுந்து வழிந்த்து. ஒரு இடத்தில் ஆட்டோ தன் வேகத்தை இழந்து ஊர்ந்த்து. சாலையோரங்களில் எல்லா மரங்களும் வெட்டப்பட்டு சாலை அகலப்படுத்த்தப்பட்டு நிர்வாணமாய் நின்றது.
எங்கள் எதிர்சாரியில் வந்த ஒரு இருசக்கர வாகனத்தின் விளக்கு எரிந்த படி வர, விளக்கு எரிகிறது என்று சொன்னபோது எனக்கு தெரியும் என்றுவிட்டு போனார்கள். எனக்கு தான் பெரிய பல்ப். எதிரில் வரும் வாகனத்திற்கு இந்த வாகனம் தெரிவேண்டும் என்பதற்காக விளக்கை போட்டபடி செல்கிறார்களாம். ஆட்டோ டிரைவர் சொன்னார்.

மாற்று திறனாளிகள் நல அலுவலகத்திற்குள் நுழையும் போதே ஷமீரிடம் சொன்னேன் இன்றும் ஒரு நட்பு நமக்காக காத்திருக்கிறது என்று.

வளாகத்தில் கொட்டப்பட்டிருந்த மணற்பரப்பின் போடப்பட்டிருந்த சிமெண்ட் இருக்கையின் மேல் அவன் அமர்ந்திருந்தான். ஷமீர் வாய மூடிக்கிட்டு வாங்கன்னு சொன்னதால நான் அலுவலரை பார்க்க சென்றேன். எங்களின் துர் அதிர்ஷ்டம் அலுவலர் முகாம் சென்றுவிட்டாராம்.

விண்ணப்பங்களை போடும்படி ஒரு அட்டைபெட்டியை காண்பித்தார்கள் அங்கிருந்தவர்கள்.

அட்டைபெட்டியில் போடுவதற்கு எனக்கு தான் மனமில்லை. என் தயக்கத்தை பார்த்த அந்த அலுவலர் விண்ணப்பத்தை பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரியின் மேசையில் வைத்தார். மூன்று சக்கர மிதிவண்டியும் தீர்ந்துவிட்டதாம்.

ஒரு வெறுமை இதயத்தில் குடிக்கொண்டு விட்டது. வெளியில் வந்த போது வாயிலில் போடப்பட்டிருந்த பென்ச்சில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் மனைவிக்கு லோன் வாங்குவதற்காக வந்திருப்பதாக கூறினார்.


காதல் திருமணமாம் ஒரு குழந்தை. என்ன குழந்தை என்று கேட்க மறந்துவிட்டேன். காதலை பற்றியதான என் கருத்து லேசாய் ஆட்டம் கண்டது. அழகை பார்த்து காதல் வரும் என்று எண்ணியிருந்தேன். அழகுக்கும் காதலுக்கும் தொடர்பில்லை என்று தோன்றியது எனக்கு.

அவர்களிடம் விடைபெற்ற பிறகுதான். அலுவலகத்தில் நுழையும் போதே நட்பாக வேண்டும் என்று சொன்ன அவரை சந்தித்தோம். குடத்திலிருந்து தண்ணீர் எடுத்து வாட்டர்கேனில் ஊற்றிக்கொண்டிருந்தார்.

நான் தமிழ்ச்செல்வி

நான் ஷமீர் அகமத்

ஷமீர் அகமத்

நான் பாக்கியராஜ்

நான் தாலுக்கா ஆபிஸ்ல ஒர்க் பண்றேன்

நான் பிடிஓ ஆபிஸ்ல

நான் பிஎச்டி பண்றேன்.

அவ்வளவுதான் எங்கள் அறிமுகம் முடிந்த்து.  எம்எல்ஏ நிதியிலிருந்து சைக்கிள் தர்றாங்க வாங்க நான் எப்போ முகாம்னு பார்த்து சொல்றேன். என்று நோட்டிஸ் போர்டில் பார்த்த போது எடுத்த படம்.ஷமீர் - பாக்கியராஜ்

வாங்க பஸ்டாண்டில் விடறேன் என்றவரிடம் அலைபேசி எண் பரிமாற்றங்களோடு விடைபெற்றுக்கொண்டோம்.பாக்கியராஜ்

வெளியில் வந்து ஆட்டோவில் அமர்ந்த பிறகு ஒரு ஜோடி  கார்த்திக் – சாந்தி இதில் சாந்தி மாற்றுதிறனாளி. இருவரும் காதலர்கள். அவர்களிடமும் அறிமுகமாகி அலைபேசி எண்ணோடு விடைபெற்றோம்.

சாந்தி - கார்த்திக்

திருவண்ணாமலையிலிருந்து செங்கம் செல்லும் போது வழியில் பிரியாணி வாங்கினோம். 


பிரியாணி கடை

பௌர்ணமி அன்று பேருந்து நிற்கும் அந்த இடத்தில் தான் அமர்ந்து உணவருந்தினோம்.

பிரியாணி வாங்கும் போதே தயங்கிய ஆட்டோ டிரைவரிடம் உங்களுக்கும் சேர்த்து வாங்குவதாக இருந்தால் வாங்குங்கள் இல்லை என்றால் வீட்டிற்கே போய்விடலாம் என்றதில் அவர் நெகிழ்ந்து போனார் என்பது பிறகு தெரிந்த்து. ஷமீரும் டிரைவரும் பிரியாணியை ஒரு பிடி பிடிக்க, ஷமீரின் அம்மா எனக்காக கொடுத்திருந்த சாதம் வித் கீரை குழம்பை நான் உண்டேன் வித் அம்மாவின் அன்போடு.

இந்த பயணம் நான் எதிர்பார்த்த எதையும் நடத்தி தரவில்லை என்றாலும். என்னை போன்ற மாற்றுதிறனாளிகளின் மனதை படிக்க ஒரு வாய்ப்பாக அமைந்த்து.

எந்த பயணியும் உங்களை போன்று என்னோடு நட்பை பரிமாறியதில்லை என்று ஆழ்ந்த நெகிழ்வோடு வீட்டில் விட்டு விடைபெற்றார் ஆட்டோ டிரைவர். அதன் பிறகு ஷமீரும்.

7 comments:

 1. நீங்கள் மகிழ்ச்சியான பயணம் செய்ய உதவிய ஷமிருக்கு உங்களின் சேவை தொடர்ந்திடவாழ்த்துக்கள்.உங்களுக்கும் சீக்கிரம் மூன்றுசக்கர வண்டி கிடைத்திடவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி அய்யா

   Delete
  2. என்னுடைய புகைப்படம் இன்னும் சேர்த்து வைக்கவும்....

   Delete
  3. அப்பவே ரெண்டு ஸ்டில் சேர்த்து எடுத்துக்கறேன்னு சொன்னேன். அதுக்குதான் அக்கா சொன்ன கேக்கனும் டா தம்பி

   Delete
 2. தினம் என் பயணம் – 1
  // தினம் என் அலுவலக பயணத்தில் என்னை காயப்படுத்தும் சில காட்சிகள் மட்டுமே இவை. //

  தினம் என் பயணம் – 2
  // திட்டவோ அல்லது பதில் தரவோ எனக்கு நேரமில்லை. அவர்களாகவே புரிந்துக்கொள்வார்கள் அனுபவத்தின் பாதையில். எது தவறு, எது சரி என்று தீர்ப்பிடலுக்கு முன்பாக நடுநிலை வகிப்போம் என்றால்...........................................................வார்த்தைகள் மௌனித்து நிசப்தமே பதிலாகிறது.//

  தினம் என் பயணம் – 3
  // கற்றல் என்பது பாடப்புத்தகங்களில் மட்டும் அல்லாமல், ஒவ்வொரு நிகழ்விலும், ஒவ்வொரு மனிதர்களிடமும், விலங்குகள் இடமிருந்தும் கூட நடைபெற வேண்டும். //

  தினம் என் பயணம் – 4
  // குடும்ப மலரின் அட்டை படத்தில் போர்க்காய் விளையாட்டு என்பதை பார்த்தவுடன் போர்க்காயா...? அப்படி ஒரு விளையாட்டா..? என்ற கேள்வியோடு படிக்கும் ஆவலை தூண்டியது. //

  தினம் என் பயணம் – 5
  // வாழ்க்கை ஒரு நூதன போராட்டம். அதில் எப்போது மகிழ்ச்சி வரும், எப்போது துன்பம் வரும் என்று தெரிவ்தில்லை. ஒவ்வொரு நிகழ்வும் ஒரு அனுபவ பாடத்தை நடத்தி செல்லும். அதிலிருந்து ஆயிரம் விடங்களை கற்றுக்கொள்ளலாம். அல்லது துவண்டு போய் வாழ்க்கையை இழந்தும் விடலாம் //

  உஙகளது வலைத் தளத்தைப் பற்றி அறிந்து கொள்ள இன்று உங்களது, “ தினம் என் பயணம்” என்ற தலைப்பில் உள்ள ஐந்து பதிவுகளையும் தொடர்ச்சியாக படிக்க நேரம் கிடைத்தது. நல்ல சிந்தனையோடு தெளிவான பதிவுகள். படித்து முடிந்ததும் நினைவில் வந்த பாடல் வரிகள் ...

  எங்கே வாழ்க்கை தொடங்கும்
  அது எங்கே எவ்விதம் முடியும்
  இதுதான் பாதை இதுதான் பயணம்
  என்பது யாருக்கும் தெரியாது
  பாதையெல்லாம் மாறிவரும்
  பயணம் முடிந்துவிடும்
  மாறுவதை புரிந்துகொண்டால்
  மயக்கம் தெளிந்துவிடும்
  - பாடல்: கண்ணதாசன் (படம்: நெஞ்சில் ஓர் ஆலயம்)


  ReplyDelete
 3. நன்றி அய்யா

  ReplyDelete
 4. "வாழ்க்கை ஒரு நூதன போராட்டம். அதில் எப்போது மகிழ்ச்சி வரும், எப்போது துன்பம் வரும் என்று தெரிவதில்லை. ஒவ்வொரு நிகழ்வும் ஒரு அனுபவ பாடத்தை நடத்தி செல்லும். அதிலிருந்து ஆயிரம் விடயங்களை கற்றுக்கொள்ளலாம். அல்லது துவண்டு போய் வாழ்க்கையை இழந்தும் விடலாம்."
  ம்ம்.. சத்தியமான வரிகள்.. பகிர்வுக்கு நன்றி..!

  ReplyDelete