என்றென்றும் உன்னோடு - 3

Posted by G J Thamilselvi On Friday, 8 March 2013 3 comments

மெல்ல மாலை மயங்கும் நேரம், காகங்களின் கா கா, மரக்கிளை கிளிகளின் கீச் கீச் ஒலியும் மனதை சாந்ததென்றலுடன் உறவாடச்செய்தது. இருளும் அல்லதா பகலும் அல்லாத, மங்கலான வெளிச்சத்துடன் கூடிய பொழுது அது.


அந்த மருத்துவமனையின் நீண்ட வளாகத்தில், சுவற்றிற்கு முதுகை கொடுத்தப்படி அமர்ந்திருந்தேன் நான். சற்றே கலைந்த தலை, லேசாய் கசங்கிய உடை. கொஞ்சமே கொஞ்சமாய் இடம் பெயர்ந்த ஸ்டிக்கர் பொட்டு, என்னை போன்றே வாடியிருந்த ரோஜா மலர்.சற்று தூரத்தில் பார்த்தும் பார்க்காமல் நின்ற அந்த குழந்தைக்கு உரியவன். என்னருகே சற்று தள்ளி அமர்ந்திருந்த கௌதமன். அவன் மேல் கால்களை நீட்டியவாறு கௌதமனின் நண்பன் ரவி, எங்களுக்கு நேர் எதிரில் அவசர சிகிச்சை பிரிவு. இடையிடையே அங்கும் இங்குமாய் அவசர நடைபோடும் வெள்ளை சீறுடை நர்ஸ்கள்.


“உங்க பேரு என்னங்க“ என்றான் கௌதமன்

“யாழினி“

“நீங்க எப்பவும் இப்படியா, இல்ல அப்ப அப்ப கிறுக்கா ஆயிடுவீங்களா...?

என் விழி இடுங்கி அதில் கேள்வி தொக்கி நின்றது. அதற்கு பதிலுறுப்பது போல் அவன் மீண்டும் தொடர்ந்தான்.

பஸ்ல நெறய பொண்ணுங்க இருந்தாங்க, உங்களுக்கு மட்டும் ஏன் இந்த வீண் வேல, இப்போ இருட்ட போகுது, வீட்ல தேட மாட்டாங்களா?

பஸ்ல நிறை ஆண்கள் கூடதான் இருந்தாங்க இங்க வந்திருக்குறது மூனு பேர் தானே, உங்களுக்கும் கிறுக்கா...?

“சரியான வாயாடிங்க நீங்க, உங்க வீட்ல செல்லம் நெறய கொடுத்துட்டாங்க போல“

“செல்லம் இல்ல, நம்பிக்கையும் சுதந்திரமும் கொடுத்திருக்காங்க“

ம் நல்ல கொடுத்தாங்க இப்படி தனியா ஊர சுத்த சொல்லி“

வாய் அப்படி பேசினாலும், மனம் அவள் துணிச்சலை கண்டு வியந்தான் கௌதம். அத்தனை மனிதர்களுக்கு மத்தியில் அப்படி ஒரு துணிவு அவளுக்கு எப்படி வந்த்து. அவளின் கலைந்த தலையும், சோர்ந்த முகத்தின் நளினமும், விழிகளின் வீச்சின் வெட்டும், பிகாசோ ஒவியத்தை நினைவுப்படுத்தியது அவனுக்கு.

நான் என்ன தியேட்டர், பார்க்குன்னா சுத்தினேன், என்று ஏதோ பேச வாயெடுத்த நான் அதோடு நிறுத்திக்கொண்டேன்.

பிறருக்கு என்னை விளக்கிக்கொண்டிருப்பதால் என்ன வந்துவிடப்போகிறது.
மச்சான் சைட் அடிக்குற நேரமாடா இது என்று காதுகளில் கிசுகிசுத்தான் ரவி

பிகாசோ ஓவியம் போல் இருக்கா இல்ல என்ற வார்த்தைகள் என் செவியையும் லேசாக தீண்டச் செய்தது.


பிகாசோ ஒவியம் போல அழகா இருக்கீங்க மேடம்என்றான் கௌதமன்.சற்றே திரும்பி முறைத்தேன்.அடுத்து அவன் சொன்ன வார்த்தை என்னை இலகுவாக்கி உணர்வின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு போனது.


என் அக்காவும் உங்கள போலதான் அழகா இருந்தா....என்றவன் ஏன்டா என்று தலையில் அடித்துக்கொண்டான் ரவியை பார்த்து.

“உங்க பேரு என்ன“ என்றேன்.

நான் கௌதம், இவன் ரவி என்று நண்பனையும் சேர்த்து அறிமுகப்படுத்தினான்.
அவன் கண்கள் குறும்போடு சிரித்த்து. அதில் கொஞ்சம் மழலையும் அதிகமாக வெகுளிதனமும் போட்டிபோட்டது.

என் பார்வையை எப்படி புரிந்துக்கொண்டானோ...அக்கா மாதிரி அழகுன்னு தான் சொன்னேன் அக்கான்னு சொல்ல்ல,  சரியா....என்று இழுத்தான்.
அப்ப சைட் அடிப்பியா...? என்றான் ரவி.


இதோ பாருடா ஆசைய, நான் பாட்டிய எல்லாம் சைட் அடிக்குறது இல்ல, ஒன்லி பியுட்டியை மட்டும் தான் பாக்குறது


என்று இல்லாத காலரை தூக்கிவிட்டுக்கொண்டான். சற்று எரிச்சலும், கூடவே சிரிப்பும் வந்த்து அவன் செயல்களை பார்த்து.


இத்தருணம் கௌதமனை வருணிக்காமல் போனால்,  வாசகர்களாகிய நீங்கள் வருத்தப்படக்கூடும். சுருண்ட கேசம், அடர் கருவிழிகள், வெளுப்பும் இல்லாமல் விஷாலைபோன்று கருப்பாகவும் இல்லாமல், நடுத்தரத்தில் ஒரு கலர் என்ன கலர் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். சராசரி உயரம். அவன் அணிந்திருந்த ஸ்கை புளு ஷர்ட்டும், கருமை நிற பேண்ட்டும், அவனை மேலும் அழகுபடுத்தி காண்பித்தன.வாயில் எப்பொழுதும் எதையோ மென்றபடி இருந்தான். கல்லூரி வாழ்க்கைக்கே உரித்தான குறும்பு அவனிடத்தில் அவ்வப்போது தலைநீட்டியது.உங்க ஹீரோ தனிமையில இனிமை காண்கிறாரா? கூப்பிடுங்க மேடம் வந்து உட்காரட்டும்என்ன சீண்டலினா உனக்கு தூக்கம் வராதாஅய்யோடா சீண்டவும் இல்லை, தூண்டவுமில்லையப்ப நிஜயத்தை சொன்ன செல்லம் இப்படி கோவிக்கலாமா


என்னை வெறுப்பேற்றுவது போல் பேசினாலும். அவன் செயல்களில் தெரிந்த கண்ணியம், அவன் மேல் ஒரு சகோதர உணர்வை ஏற்படுத்தியது. அவன் அக்கா மாதிரி என்றதும் கூட உடன் பிறப்பில்லாத எனக்கு, ஒரு சகோதரன் இப்படி இருந்திருந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன்.


அடிவாங்க போறடாஎதுக்காம்கொஞ்சமாவது மரியாதை இருக்கா உனக்குசிரித்தான், சிரிப்பிலும் கொஞ்சம் லேசான வருத்தம் தெரிந்தது. பசியும் தெரிந்தது. எனக்கும் தான், நாங்கள் யாரும் உணவருந்தவில்லை.பசி வயிற்றின் உள் பாகங்களோடு கதை பேசியது. இரண்டு கால்களுக்கு இடையே முகத்தை புதைத்துக்கொண்டேன்.ஹலோ எக்ஸ்க்யுஸ்மீஇந்த எக்ஸ்க்யுஸ்மீ யில் தனுஷ் ஐ நினைவுப்படுத்தினான்.உங்க ஆள கூப்பிடும்மா, பசிக்குது அப்புறம் அழுதுடுவேன்என்று வடிவேலை துணைக்கழைத்தான். நான் முகத்தை நிமிர்த்தாமலேயே, எனக்கு எரிச்சல் பண்மடங்காக 


“என் ஆளா..? என்ன உளர்ற“

நான் தப்பா சொல்லம்மா, இவன் என் ஆளு, ஆளுன்னா...என்று இழுத்தான் பிறகு தோஸ்த் ப்ரண்ட் என்று விளக்கினான் அது மாதிரி

போதும் நிறுத்து என்பது போல் கையை அபிநயித்தேன். பிறகு


எப்படிடா கூப்பிடறதுஎன்றேன்.கூப்பிடவேண்டாம் பாடுங்க, உன் பேரே தெரியாது, உன்னை கூப்பிட முடியாது, உனக்கோர் பெயர் வைப்பேன் உனக்கே தெரியாதுப்ளீஸ் டா கௌதம், விளையாடாம கூப்பிடுஎப்பவும் ஒரே மாதிரி இருக்கனும், தூங்கும்போது மட்டும் சார், தோள் மேல சாஞ்சுப்பாங்களாம், இப்ப மட்டும் டூ விட்டுடுவாங்களாம், என்ன பொண்ணுங்கடாஅவன் விளையாட்டாய் சொல்லிவிட்டு போனாலும் மனம் காயப்பட்டது மனம், முன் பின் தெரியாத யாரோ ஒருவனின் தோளில் இளைப்பாறியிருக்கிறேன், என்பதை மனம் குற்றப்படுத்தியது. ஓட்டுநரின் உடல் சற்று தேறியதாய் மருத்துவர் சொன்னபிறகே அந்த குட்டி உறக்கம் கூட. என்னையறியாமல் உறங்கி விழுந்திருப்பேன் போலும், தோளில் சாய்த்துக்கொண்டான், அதற்கு இத்தனை கிண்டல்.உறக்கம் கலைந்து எழுந்த போது, மனம் பதறி விலகியது, அவன் உரிமையாய் சாய்த்துக்கொண்டதில் நட்பையும் மீறி வேறு ஏதோ தெரியவே, பெண்மைக்கே உரித்தான எச்சரிக்கை குணம், அவன் பிடியில் இருந்து விலகச்செய்தது.சற்று தூரத்தில் குழந்தையை தோளில் போட்டபடி நின்றிருந்த அவனை பார்த்தேன். அவன் மேல் எனக்கு கோபம் வந்தது. திருமணம் செய்து குழந்தையும் பெற்றுக்கொள்வானாம், இன்னொரு பெண்ணை உரிமையுடன் தோளிலும் சாய்த்துக்கொள்வானாம். என்ன கொடுமை இது.


3 comments:

 1. சகோதரிக்கு “ உலக மகளிர் தினம்” ( INTERNATIONAL WOMEN’S DAY ) – நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete

 2. வணக்கம்

  விண்முகில் தோழி! உன்றன்
  வியன்தமிழ் நடையைக் கண்டேன்!
  தண்முகில் வரவாய்.. என்றன்
  தமிழ்வலை உன்னை எண்ணும்!
  வண்முகில் போன்றே நல்ல
  வளந்தரும் கருத்தை நல்கு!
  பண்முகில் தழுவும் செஞ்சன்
  பாரதி வாழ்த்து கின்றேன்!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 3. கௌதமனின் வர்ணிப்பு...

  என்ன கொடுமை இது...?

  ReplyDelete