என்றென்றும் உன்னோடு - 2

Posted by G J Thamilselvi On Saturday, 2 March 2013 2 comments

மனம் முழுவதும் திகிலை சூழ்ந்து கொண்டாலும்படிக்கும் போது சாரணர் இயக்கத்திலிருந்ததால் ஏற்பட்ட மனதிடம் உடன் வரவே செய்தது.

நான் ஓட்டுநர் இருக்கையை நோக்கி நகரவும்பயணிகளின் பயக்கூச்சல் ஒலியும்நிகழ்வாய் இருக்கும்பொழுதே........ கல்லூரி மாணவர்களின் ஒருவன் ஓட்டுநர் இருக்கையை ஆக்கிரமித்துபேருந்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து நிறுத்தினான். நிறுத்தப்பட்ட பேருந்திலிருந்து விட்டால் போதும்மென்று பயணிகள் வெளியேறமாணவர் இருவர் ஓட்டுநரை இரு இருக்கைகளின் இடையே உள்ள இடைவெளியில் கிடத்தினார்கள்,அவர்களில் ஒருவன் ஓட்டுநரின் இதயத்தில் கைகளால் அழுத்தினான், (இந்த சீன் எல்லா புகைப்படங்களிலும் வருமே.........உங்களுக்கு பரிச்சயமானதுதான்.)

நான் ஓட்டுனரின் தலைப்புறமாக அமர்ந்து அவர் தலையை என் மடிமீது வைத்துக்கொண்டேன். வியர்த்த முகத்தை சேலை தலைப்பால் துடைத்து விட்டேன். ஓட்டுநர் நல்ல நேரம் போலும் கால் மணி நேர போரட்டத்திற்கு பிறகு கண்களை மெல்ல திறந்தார். கல்லூரி மாணவர்களிடையே இதற்கும்ஓஓஓஓவென்ற கூச்சல்தான்.
ஒரு உயிரை காப்பாற்றிய திருப்தி அம்மாணவர்கள் முகத்தில்உயிர் தப்பிய உணர்வு எந்தன் உள்ளத்தில்இந்த நிலையில் மாப்பிள்ளையின் புகைப்படத்தை மறந்தே போனேன்.
ஒரு உயிர் பிழைத்த உற்சாகம் சில நொடிகளிலேயேமரணத்தைதழுவியது. ஓட்டுநர் மூச்சுவிட திணறினார். இமைகள் பிரிய துடித்து,இயலாமையுடன் தழுவிக்கொண்டன. உயிர் பிரியும் தருவாயில் நீண்ட பெருமூச்சுகள் எழுவது போல் தொடர்பெருமூச்சுகள் எழுந்தது அவரிடத்தில். அவர் என்று சொல்வதற்கில்லை அவன் தான் என் வயது தான் அவனுக்கும் இருக்கும் என்று எண்ணுகிறேன்.

நான் முடிவே செய்துவிட்டேன்லைவ்வாக ஒரு மரண நிகழ்ச்சி அரங்கேறப்போகிறது என்று. கத்தி அலறவும் முடியாமல்துக்கத்தை மறைக்கவும் முடியாத நிலை எனக்கு. என் உடல் வியர்வையில் குளித்தது.விழிகளில் கண்ணீர் பெருகியது. நான் என்ன செய்கிறேன் என்பதை மறந்தேன். மெல்ல அவன் காதருகில் குனிந்து உன்னை நேசிக்கிற யாருக்காகவேணும் நீ பிழைத்துக்கொள் என்றேன்.
உலகத்தில் பிறந்த யாருக்கும் நம்மை பிறர் அன்பு செலுத்த வேண்டும்,அங்கீகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கவே செய்கிறது. அது ஒரு தேடல். 

(
நெப்போலியன் ஹில் எழுதிய புத்தகங்களை படித்ததின் விளைவு)
உன் மனைவிக்காகஅல்லது காதலிக்காகஉன்பெற்றோருக்காக அல்லவென்றால்உன்னை நேசிக்கும் யாரோ ஒருவருக்காகஅட்லீஸ்ட்எனக்காகவாவது, (உடனே அதீதமாய் கற்பனை செய்துவிடாதீர்கள்,காதலுடன் நேசிப்பதற்கும் சக மனிதனாய் நேசிப்பதற்கும் அதிக வித்தியாசம் உள்ளது.) நான் மீண்டும் மீண்டும் ஆழமாய்உணர்வுப்பூர்வமான உச்சரிப்பினூடே கூறினேன். என்னை சுற்றியிருந்தவர்கள் என்னை பயித்தியமாக கூட எண்ணியிருக்கக்கூடும்.
நான் அழுதேன்அரற்றினேன்பிரார்த்தனை செய்தேன். ஆபத்பாந்தவா அநாதை ரட்சகாஎந்த ரூபத்திலாவது வந்து விடு வந்து காப்பாற்று

யார் அந்த பொண்ணுஅப்படி அழுவுது”.

அதுவா டிரைவர் பொண்டாட்டியாம்பா பாவம் சின்ன வயசு
அட நீ வேற டிரைவருக்கு இன்னும் கலியாணம் ஆகல” இடை மறித்து ஒருவர்.
அப்படியா சொல்ற..... ஒரு வேள தங்கச்சியா இருக்குமோஅவர்களின் ஆராய்ச்சி என் பக்கமாக திரும்பியிருக்கஎல்லோருடையகவனத்தையும் ஈர்த்தது அந்த குரல்நகருங்கப்பா டாக்டர் வந்தாச்சு,வழிவிடுங்க..........
கூட்டம் விலகி வழிவிட்டது. ஓ என் பிரார்த்தனை கடவுளின் செவிகளுக்கு எட்டிவிட்டதா?”.பெண்களின் கண்ணீருக்கு கற்களே கரையும் போதுகடவுள் கரைய மாட்டாரா என்ன?.வந்த மருத்துவர் ஏதோ ஒரு ஊசியை ஓட்டுநருக்குகுத்தினார். நான் கண்களை இறுக மூடிக்கொண்டேன். எனக்கு ஊசி என்றால் கொஞ்சம் பயம். குழந்தைகளுக்கு ஊசி குத்தினால் போச்சு தான் காதும் சேர்ந்து பொத்திக்கொள்ளப்படும் என்னால்.

“ கொஞ்ச நேரத்திற்கு பயமில்லைஒன் ஹவர்க்குள்ளாக இவரை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தாக வேண்டும். இவரோடு யார் வருகிறீர்கள்என்று மருத்துவர் சுற்றும் முற்றும் பார்த்தார்.

நான் வருகிறேன் சார்” என்றேன்.

“ 
நீங்கள்........என்று இழுத்தார்

“ 
பயணிதான்” என்று முடித்தான் அந்த குழந்தைக்கு சொந்தக்காரன்.

(
மருத்தவரின் பார்வையில் பேருந்தில் பயணம்செய்ததற்காகவே இப்படி ஒரு ரியாக்ஷான என்ற கேள்வி தொக்கிநின்றது)

குழந்தையை பிடியுங்கள்” என்று என்னிடம் நீட்டினான்.
என் மடியில் ஒட்டுநரின் தலை வைக்கப்பட்டிருந்ததால்நான் குழந்தையை வாங்க தயங்கவே..........மருத்துவர் கௌதமன்என்று குரல் கொடுத்தார்.

அண்ணா என்றபடி முன் வந்தான் அவன்உங்களுக்குஅறிமுகமானவன்தான் சற்று முன் பேருந்தை நிறுத்திய அந்த மாணவன்.

இவரை தூக்கி காரில் கிடத்திவிடுங்கள் பாஅவனும் நண்பர்களுமாய் ஓட்டுநரை தூக்கிச்சென்றார்கள்.
நான் குழந்தைக்கு உரியவனிடமிருந்து குழந்தையைவாங்கினேன்.

ஹேய் நாம தான் தப்பா புரிஞ்சுகிட்டோம்அந்த பொண்ணு,கொஞ்சம் நெட்டையா குழந்தையை வச்சிக்கிட்டு இருந்தானே அவன் பெண்டாட்டிப்பா..........கிசு கிசு தொடர்கிறது. இது மனிதர்களின் இயல்பு போலும். நம் வீட்டு சங்கதிகளை மறந்து, அடுத்த வீட்டு அவலுக்காக அலைவது. எதாவது பேச வேண்டும். அதில் எந்த அளவிற்கு உண்மை என்பது அவர்களுக்கு தேவை இல்லை. அவர்கள் பேசுவது அத்தனையும் உண்மைதான் அவர்களை பொறுத்தவரை.

2 comments:

  1. இருக்க வேண்டிய முக்கியமான தேடல் தான்...

    ReplyDelete
  2. நேர்மையான உங்களின் மனித நேயம் புரியாதவர்களைப் பற்றி கவலைபடாதீர்கள்.உங்களின் நேர்மையான உதவி எனக்கு பிடிச்சிருக்கு.வாழ்த்துக்களுடன் ஒரு உயிருக்காக பிராத்தனை செய்து அவரை மற்றவர்களுடன் பிழைக்கவைத்த உங்களின் பணி இன்னும் தொடரட்டும்

    ReplyDelete