பாசாங்கு

Posted by G J Thamilselvi On Thursday, 21 February 2013 0 comments

மழை நனையும்
ரோஜாவாக தான்
உன் அன்பில்
குளிர்ந்து போகிறேன்


ரோஜாவும் பரிகசிக்கிறது
குளிர் நடுக்கத்தில்
நடுங்கிச் செல்லும்
என்னை பார்த்து

இந்த நடுக்கம்
நீ அணைத்துக்கொள்ள
வருவாய் என்பதால் தான்

அடிக்கள்ளி என்று
உன் கை தலை தட்டுவதில்
இதழ்கள் புது பிறவி எடுக்கிறது
குவித்த பின் சுழித்து

ஸ் ஆ குளிர்கிறது
என்கிறேன்
தள்ளியே நிற்கிறாய்
கேளாதது போல

வடிகட்டின முட்டாள்
என் முணுமுணுப்பில்
விழிப்பாகிறாய்
ஓரக்கண்ணில் பார்த்து
அந்த பார்வை
எதை சொன்னது
படுக்கை தான் கசங்கியது
மூளை பாசாங்கு செய்கிறது
தெரியாததை போல

பாசாங்கில் பசப்புவதுதான்
பெண்கள் நிலை போலும்
வேண்டும் என்பதை
வேண்டாம் என்றே
வார்த்தைகள் ஸ்பரிசிக்கின்றன
எந்த கண நிகழ்விலும்

0 comments:

Post a Comment