எண்ணப் பதுமைகள்

Posted by G J Thamilselvi On Tuesday, 19 February 2013 1 comments

பெருவெளியின்
துளிகளின் துகள்களில்
ஒவ்வொன்றிலும்
உன் முகம்

தொட்டு வடிகிற
ஒவ்வொரு துளியிலும்
உன் விரலின்
ஸ்பரிசம்

உறவாடலின் ஒத்திகை
மழையுடன் என்
நிகழ்வு

அனுபவித்தலின்
அகழ்வுகள்
நினைவு பதிவுகளின்
பரிந்துரை

இது கனவு தான்
காட்சி அமைத்தலுடன்
தொடர்கிறது
உன் நினைவு பதுமைகள்


குளுமையும் சில்லிப்பும்
உன் அருகாமை
உள்ளுணர்வை
உருவாகித்தபடி

மழை மண் நான்
இந்த முத்தரப்பு
கூட்டத்தில்
உன்னுடன் ஆன
காதல் பகிரப்படுகிறது
துளி துளியும்

1 comment: