அவன் என் காதலன்

Posted by G J Thamilselvi On Saturday, 23 February 2013 1 comments

சிலையான சேதிக்குள்
உயிராக வடித்தவன்
ஒப்பனைக்குள் காதல்
மறைத்து வெறுப்பை திணிப்பவன்
என் காதலன்


கொஞ்சுவதற்கு தடையில்லை
வார்த்தைக்கு ஓய்வில்லை
தலைவருடும் விரல்களில்
உறக்கம் தழுவில்லை

ஏதோ ஒரு பயத்தில்
நிகழ்வை தொலைத்து
பிரிவை நினைத்து
ஏக்கத்துடன் பரிதவித்து
நிஜத்தை கரைப்பவன்

ஆசையுடன் நெருங்க
ஏக்கமுடன் கலைகிறான்
மேகத்திரை மூடி
முக அழகை மறைக்கிறான்

கொஞ்சுதல் நினைவில்லை
வார்த்தைகள் பிறக்கவில்லை
பிரிவு துயர் வரும் முன்னே
நொடிக்கொரு மரணத்தில்
லயிப்பவன் அவன் என் காதலன்

1 comment:

  1. அருமையான காதல் கவிதை! நன்றி!

    ReplyDelete