விலகாதே எப்பொழுதும்...!

Posted by G J Thamilselvi On Wednesday, 13 February 2013 1 comments

தலை அணை எப்போதும்
நீ ஆகவே
உருவகிக்கப்படுகிறது.


உன் பரந்த நெஞ்சத்தில்
தலை சாய்ப்பதே
என் பொழுது போக்காகிறது

என் கன்னம் பட்டு
எழும் உணர்வே
சிலாகித்து பேசப்படுகிறது.
மனதால்

நீ என்னருகில் இருப்பதே
உலகின் மகிழ்வு எல்லையாகிறது
விலகாதே எப்போதும்

1 comment: