இது ஒரு கனவு

Posted by G J Thamilselvi On Thursday, 21 February 2013 0 comments

பாதங்களின் கீழ் சருகுகளின்
சரசங்கள் சப்திக்கின்றன
நம் மன உரசல்களை
நவீனப்படுத்தி


உன் பற்றுதலுக்கு ஏங்கும்
விரல்களின் கூடுகை
தங்களுக்குள்ளாக
இணைதலில் பிரிந்து

நட்சத்திர இரவின்
தொடர் பயணத்தில்
உன்னை தேடி
நெடுந்தூரம் நான்

நாய்களின் குரைப்பும்
கூர்க்காவின் விசிலும்
காற்றின் சீழ்க்கையும்
இடை நின்று கேட்டபடி

விழிகளில் தேடுதல்
ஏக்கத்தை ஏலத்தில்
எடுத்த படி
ஒவ்வொரு அடியும்
காதலில் முன்னோக்கி

உணர்வின் உச்சமும்
அழுகையின் மிச்சமும்
கசப்பில் காழ்ப்பும்
இனிப்பி்ற்குள் உவர்ப்புமாக
உருவக கூட்டமைப்பில்
நடிகையாகிறது மனம்

எழுப்புதல் ஒலியில்
கண் கசக்கி எழுகிறேன்
அடடா இது ஒரு கனவு

0 comments:

Post a Comment