தனிமை தகர்ப்பு

Posted by G J Thamilselvi On Saturday, 16 February 2013 1 comments

ஏகாந்தம் தான் எனக்கான
நிகழ்தலின் இருப்பு
இருவரும் இருத்தலான
கணம் தான்
எனக்கான தனிமை


எது வேண்டும்...?
ஆனாலும் நிகழலாம்
தீண்டலும் தள்ளலும்
இறுக்கலும் எள்ளளும்
திட்டலும் பரிகசிப்பும் கூட
இயல்பான கால கடத்தலில்.

அணைத்தபடி செயல் நிறுத்தலும்
காதல் உச்சத்தின்
முத்திரை பதிப்புதான்
உன் பொருட்டு.

எண்ணங்களற்ற மனவெளியில்
இறக்கைகள் நீட்டி
பறப்பதான அனுபவம் தான்
நம் தனிமை தகர்ப்பு

1 comment:

  1. தனிமை தகர்ப்பு அருமை.தனிமை இருப்பு கஷ்டம்

    ReplyDelete