நொடி பொழுதும்

Posted by G J Thamilselvi On Wednesday, 13 February 2013 0 comments

நினைவுகள் எப்பொழுதும்
உன்னில் நின்றே சுற்றுகிறது
நீயே என் மையம் போல


தனிமை
உதடு நெளியும் புன்னகையும்
மெல்லிய தலைகோதலுமாக
நகர்கிறது இதமாக

நான் சாய்தல் சுவர்
நீ ஆக பாவித்து
அழுந்திக்கொள்கிறது முதுகு

உன் மடி என் மஞ்சமாக
கற்பனையில் திளைக்கிறது
காதல் மனம்

காதலின் உச்சம்
என் மனநிர்வாணம் சமர்ப்பித்தல்
என்றே சரசமாடுகிறது
நொடி பொழுதும்.

0 comments:

Post a Comment