இதழ்களின் ஒத்தியெடுப்பு

Posted by G J Thamilselvi On Thursday, 21 February 2013 1 comments

சங்காக முழங்கும் இதயம்
சரசத்தின் சாத்தியங்கள்
எண்ணியதில்


மொட்டின் இதழ் விரிதல்போல
ஒவ்வொரு நினைதலின்
கல்வெட்டு பதாகைகள்

கோப்புகளின் பத்திரப்படுத்தல்
போல என்னிலான
இரகசிய உணர்வுகள்
உனக்கான பகிர்தலில்

அணிகள் ஏதுமில்லை
நீ தீண்ட தடையாகுமோ
என்ற எண்ணத்தில்

உச்சி முகர்தலில்
உன் காதலை உச்சமாக
தொடங்கலாம் நீ
காதல் எப்போதும்
உடலின் உரசலோடு
பேசும்

தீண்டலும் தூண்டலும்
அத்தியாவசிய நுகர்வுகள்
முத்தமிடுதலின் முற்றுகையில்
மொத்த மனதையும்
பரிகரிக்கும் பாசாங்கு அது

ஒளித்து வைக்க எதுவுமில்லை
தேவைதான் எனக்கு
தேகத்தின் ஒவ்வொரு துளியிலும்
உன் இதழ்களின் ஒத்தி எடுப்பு

1 comment:

  1. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete