புறகணிப்பு

Posted by G J Thamilselvi On Saturday, 16 February 2013 2 comments

நினைவுகள் போதும்
என்று தான்
நினைத்துக்கொள்கிறேன்

உன் தீண்டலுக்காக
ஏங்கும் உடலை
புறக்கணித்தபடி

அது கெஞ்சுகிறது
கொஞ்சுகிறது
என் புறக்கணிப்பும்
தொடர்கிறது

உடல் சிணுங்கும் போது
மூழ்கிபோகிறேன்
ஏதோ ஒரு பணியில்
வலிந்து முனைப்போடு

மரக்கட்டையா நீ
வினா எழுப்பும் போது
மட்டும் கசிந்து போகிறது
இதயம்

இந்த கட்டுபாடு
உலகத்திற்காக அல்ல
உனக்காக...
நம் நேசித்தலின் பொருட்டு
என் உடல் உனக்கானது
மட்டுமே என்ற
புரிதலின் கொள்கைக்காக
உடலின் பட்சத்தில்
என் புறக்கணிப்பு
தொடர்கிறது.
ஒருதலைப்பட்சமாக...!

2 comments:

  1. தொடர்கிறது.
    ஒருதலைப்பட்சமாக...!
    nice lines.

    ReplyDelete