நமக்கான உலகில்

Posted by G J Thamilselvi On Tuesday, 19 February 2013 2 comments

இளம் நிறத்தில்
இசைந்து எனை
உண்கிறது காதல்

இரவின் தீட்சண்யம்
உயிர் சக்தியின்
உந்து படைப்பை
தட்டி எழுப்புகிறது

உற்சாக வீறிடல்கள்
எப்போதும்
புதியதாக கை சேரும்
ஒவ்வொரு நிகழ்தலுக்கு
ஆகவும்.

உள்ளக்காதலின் பீறிடல்
உற்சாகமாக நீ
ஏந்தி என்னை சுற்றியதும்

ஓம் என்று சுழன்று
தளும்பும் காற்றிசையின்
பெருத்த ஓசையை
ரசித்தபடி
உன் மார்பில்
புதைந்த நொடியும்

கீச்சிட்ட சிட்டொலியில்
குருவி இடம் தேடி
அலைந்த விழியும்

பறவையின் ஒற்றை
இறகால் முகம் வருட
பிறந்த சிலிர்ப்பும்

காய்ந்த சிறகொன்றில்
வடிக்கப்பட்ட
நம் இதய பெயர்களும்

தாழம்புதர்களின்
தவழும் மணமும்
பாம்பின் கதையில்
பதறும் மனமும்

அணில் குஞ்சின்
வசீகரத்தில்
எனை மறந்தாயென
கொஞ்சி சினம்
கொண்டலும்

இரவின் நிறத்தில்
நினைவிதழ் படைத்து
கவிழ்கிறது
நமக்கான உலகில்.

2 comments: