வாழ்வின் அர்த்தம்

Posted by G J Thamilselvi On Tuesday, 19 February 2013 1 comments

ஒவ்வொன்றும் பேசலாம்
உன் கரம் பற்றிக்கொண்டோ
பற்றாமலும்


செல்ல சண்டைகள்
போடலாம் வேண்டும் என்றும்
வேண்டாம் என்றும்

கவலைகள் காட்சிபடுத்தி
கலைகளாக மாட்சி
படுத்தலாம்

தொடரலாம் பேச்சை
கோபம் காமம் பகை
ஆசை மூர்க்கம் என்று
எல்லாமும்
நம்மிடம் நிர்வாணப்படும் வரை

தொடர்தலில் அமைதி
காணுதல் தொடரும்
மௌனம் மொழியாகும்
உணர்வுகள் வார்த்தைகள்
உதவி இன்றி பகிரப்படும்

உடலை கடந்து
உள்ளத்து நிர்வாணம்
புத்துயிர் மலராக
மலர்ந்து நிற்கும்
காதல் உதயத்தின் தருணம்
அங்கு நீயும் நானும் இல்லை
நாமும் இல்லை
பார்த்தலும் இல்லை
பார்ப்பவனும் இல்லை

விழித்து நிற்கும்
கவனத்தின் உயிர்ப்பில்
காதல் மட்டும்
காதலாக மட்டும்
வாழ்தல் மட்டும் வாழ்வின்
அர்த்தம்

1 comment:

  1. வாழ்தல் மட்டும் வாழ்வின்
    அர்த்தம்//
    எதுவுமே இருப்பதில்லை நம் வாழ்கையைதவிர

    ReplyDelete