லீலைகள்

Posted by G J Thamilselvi On Monday, 18 February 2013 1 comments

மனம் முத்தமிடுகிறது
எப்போதும்
சுற்றிலும் தனிமை விரிப்பை
குளிருக்காக போர்த்திய படி


தலையணை ஆகம பக்கமாக
மடி வடிவெடுக்க
தாங்குதல் நிலையில்
உனக்காக நான்.

பாதையின் குறுக்கீடாக
இல்லாமல்
நமக்கான பாதையில்
நமக்கான பயணத்தில்
வாழ்தலின் இயங்குதலில்
இசைந்திருக்கிற நாம்

ஆக்கற் கலையின்
விடியல் இரகசியமாக
உரசி நிற்கிறது காமசேலை
உடுத்திய காதல்

பசுமை மலர்களின்
ஒவ்வொரு அணிவகுப்பும்
இசைவான இணைவிற்காக
இலகுவாக இமைக்கிறது
உயி்ர்களின் லீலைகள்.

1 comment:

  1. மன லீலைகள் விசித்திரமானவைதான்!

    ReplyDelete