நிரூபித்தல் அறியாமல்

Posted by G J Thamilselvi On Tuesday, 19 February 2013 2 comments

நம் பார்வைகள்
ஒரு திசையில்தான்
நான் வெளியிலும்
நீ என்னிலுமாக
நோக்கலில் உயிர்க்கிறது
எதார்த்தத்தின் நிழல்கள்


உன் கவனம் எப்போதும்
என்னில் தான்
உன் சிந்தனை கூட்டில்
எனக்காக மட்டுமே
விரிக்கப்படுகிறது
எண்ண படுக்கை

உன் உள்ளக்கூட்டில்
சிறை பிடித்து
வசமாக்கத்துடிக்கிறாய்
ஒவ்வொரு கணமும்
உன் காதல் வெளிப்பாடு
வகைகளில் ஒன்று அது

எனக்கான நேரங்கள்
உனக்காக மட்டுமே
பகிரப்படவேண்டியதான
எதிர்பார்ப்பு
உன் காதலின் மிகை பாடு

தன் பொம்மையை
பத்திரப்படுத்தும்
குழந்தையை போல
என்னை பாதுகாப்பதிலேயே
உன் வாழ்வின் கணங்கள்
கடந்து போகிறது

எனக்கு சொல்
உன் பயங்களை அகற்ற
என்ன செய்ய
என் காதல் மிச்சமில்லாமல்
உனக்கு பரிமாறப்பட்ட
தருணங்களை
ஏன் மறந்தாய்

மறதியினால் தான்
காதல் உயிர்த்தல்
மறந்து தத்தளிக்கிறாய்
தவிப்போடு

அழுகிறேன் நான்
உன் செயல்களுக்கு
ஆக அல்ல
உன் குழந்தை மனதில்
புரிதலுக்கு
என்னை நிரூபித்தல்
பாங்கு என்ன என்று
அறியாமல்.

2 comments:

  1. உண்மைக்காதல் வெல்லும்.. புரிகிறது..!

    ReplyDelete
  2. அருமையான காதல் கவிதை! நன்றி

    ReplyDelete