வரலாறு படைக்கட்டும்

Posted by G J Thamilselvi On Thursday, 21 February 2013 0 comments

மந்திரங்கள் என்ன சொல்கிறது
திருமணத்தின் போது
மொழி தெரியாமல் புரியவில்லை
என் இதய பாங்கிற்கு


உடன்படிக்கை முத்திரையாய்
நீ விரல் போட்ட வளை
நம்பிக்கையை விதைக்கிறது
உச்ச காதலின் புற
அடையாளமாக
இணைந்து வருகிறேன்
இறுதி யாத்திரையின்
நிகழ்வொன்று வரை

என்னை நிரூபித்தலிலே
இனிதான காலம்
கடந்து போகாமல்
நம்பிக்கையின் சாட்சியாக
வரலாறு படைக்கட்டும்
நித்தமும்.

0 comments:

Post a Comment