உன் வருகைக்காக

Posted by G J Thamilselvi On Tuesday, 19 February 2013 1 comments

வன மலர்களின்
படுக்கையில்
நான் கிடக்கிறேன்
உன் வருகைக்காக


எப்போதும் சுயம்
இல்லா உணர்வில்
காதல் மயக்கத்தி்ல் நான்

நான் மறைய கற்பவர்கள்
காதலித்து இருக்கலாம்
கரைந்திருப்பார்கள்
துணையுடன் உயிர்ப்பில்

இந்த தனிமை
உன் வருகைக்கான
எதிர்பார்ப்பில்
உன் அருகாமையின்
பங்கேற்பில்
கலையுடன் கலந்து
போகிறது.

கண்களிலும் இதழிலும்
என் தேவை உணர்ந்து
நீ செய்த சேவைகளை
அசைபோடுகிறது
உவகையுடன்

1 comment:

  1. காதல் பேசும் கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete